எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நானோ காரின் ஏஎம்டி மாடல் - என்னென்ன புதுசு?!

Written By:

இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட ஏஎம்டி மாடலாக நானோ எஃப்- ட்ரோனிக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள், கூடுதல் வசதிகள், ஏஎம்டி கியர்பாக்ஸ் என முற்றிலும் புதிய வகை மாடலாக இந்த நானோ கார் மாடல் வருகிறது.

வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் ஆவலை கிளறியிருக்கும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிக்கும் புதிய சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. நானோ ஏஎம்டி

01. நானோ ஏஎம்டி

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருந்த டாடா நானோ F- Tronic கார் சில கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது. அவை என்னென்ன என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 02. சிறப்பம்சங்கள்

02. சிறப்பம்சங்கள்

நானோ ட்விஸ்ட் ஆக்டிவ் என்ற பெயரில் ஏஎம்டி மாடல் வர இருக்கிறது. இந்த காரில் ஸ்மோக்டு ஹெட்லைட்டுகள், பின்புற கதவை திறக்கும் வசதி, புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கும்.

03. டாப் வேரியண்ட்

03. டாப் வேரியண்ட்

நானோ ட்விஸ்ட் ஆக்டிவ் என்ற பெயரில் ஏம்டி கியர்பாக்ஸ் கொண்ட நானோ மாடல் வருகிறது. நானோ காரின் டாப் வேரியண்ட்டாக இந்த புதிய ஏஎம்டி மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

04. எஞ்சின்

04. எஞ்சின்

டாடா நானோ ஏஎம்டி காரில் இப்போது இருக்கும் அதே 38 பிஎஸ் சக்தியையும், 51 என்எம் டார்க்கையும் அளிக்கும் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். அதேநேரத்தில், தற்போது 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், நானோ ட்விஸ்ட் ஆக்டிவ் மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

 05. ஏஎம்டி.,யின் பயன்

05. ஏஎம்டி.,யின் பயன்

ஆட்டோமேட்டிக் கார்களை போன்றே ஏஎம்டி மாடலிலும் க்ளட்ச் பெடல் இருக்காது. பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் பெடல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மாடல் நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கும். குறிப்பாக, பெண்கள், முதல்முறை கார் வாங்குபவர்களுக்கு ஓர் நல்ல சாய்ஸாக இருக்கும்.

06. மைலேஜ்

06. மைலேஜ்

டாடா நானோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25 கிமீ தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இணையான மைலேஜை இந்த கார் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு

07. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு

புதிய டாடா நானோ ஏஎம்டி மாடலில் 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

08. விலை

08. விலை

ரூ.2.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டாடா நானோ ஏஎம்டி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ளட்ச் பெடல் இல்லாத வகையில், இது மிக குறைவான விலை கொண்ட மாடலாக இருக்கும்.

09. சப்ளையர்

09. சப்ளையர்

மாருதி செலிரியோ, டாடா ஸெஸ்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸை சப்ளை செய்யும் மேக்னட்டி மரெல்லி நிறுவனம்தான் டாடா நானோ காருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸை சப்ளை செய்ய இருக்கிறது.

10. அறிமுகம்

10. அறிமுகம்

அடுத்த மாத துவக்கத்தில் டாடா நானோ காரின் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
The Nano by Tata Motors has gone through several updates, it has also been tested in several avatars that could boost sales. They have now decided to provide it with an AMT option.
Story first published: Friday, April 17, 2015, 9:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark