டாடா சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டாடா சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவி மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சக்தி கொண்டதாக மாறுதல் செய்யப்பட்ட எஞ்சினுடன் புதிய டாடா சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவி வந்துள்ளது. அனைத்து முக்கிய விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

முகப்பு டிசைன் முகப்பில் முக்கிய மாற்றம் லேண்ட்ரோவர் எஸ்யூவி போன்ற அமைப்புடைய தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கபப்பட்டுள்ளது. புதிய பம்பர் டிசைன், ஏர்டேம் ஆகியவையும் புதிய மாடலாக இதனை காட்டுகிறது.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

முகப்பு டிசைன் முகப்பில் முக்கிய மாற்றம் லேண்ட்ரோவர் எஸ்யூவி போன்ற அமைப்புடைய தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கபப்பட்டுள்ளது. புதிய பம்பர் டிசைன், ஏர்டேம் ஆகியவையும் புதிய மாடலாக இதனை காட்டுகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜாவா பிளாக் என்ற புதிய கருப்பு நிற இன்டிரியர் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஆங்காங்கே ஆக்சஸெரீகளின் டிசைனை எடுத்தியம்பும் வகையில், சில்வர் வண்ண பாகங்கள் மூலம் அழகூட்டப்பட்டுள்ளன. தையல் வேலைப்பாடுடன் கூடிய இருக்கைகளும் இன்டிரியருக்கு அழகு சேர்க்கும் விஷயம்.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருந்த அதே 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் இருக்கிறது. ஆனால், இதன் அதிகபட்ச சக்தியை 10 சதவீதம் கூட்டியுள்ளனர். இதனால், இப்போது இந்த எஸ்யூவி அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. குறிப்பாக, லோ எண்ட் டார்க் மிகச்சிறப்பாக இருக்கும் விதத்தில் எஞ்சினில் மாறுதல்களை செய்துள்ளனர்.

வசதிகள்

வசதிகள்

புதிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

எல்சிடி திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

மல்டி ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல்

இரண்டு முகப்பு கிரில்கள்

எலக்ட்ரானிக் ஷிஃப் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம்

ரியர் வென்ட்டுகளுடன் கூடிய டியூவல் ஏசி

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டாப் வேரியண்ட்டில் டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ்

அல்ட்ராசானிக் ரியர் பார்க்கிங் சென்சார்கள்

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எல்எக்ஸ், இஎக்ஸ், விஎக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், விஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஆர்டிக் சில்வர், ஆர்டிக் ஒயிட், பியர்ல் ஒயிட், அர்பன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்டெர்ன் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

எல்எக்ஸ் - ரூ.9.99 லட்சம்

இஎக்ஸ் - ரூ.11,60 லட்சம்

விஎக்ஸ் - ரூ. 13,02 லட்சம்

விஎக்ஸ் [4 வீல் டிரைவ் சிஸ்டம்]- ரூ. 14,35 லட்சம்

 
English summary
Tata Motors is revamping their line of vehicles in the Indian market. The Indian manufacturer recently launched its new GenX Nano. They have now launched their new Safari Storme in India based on their philosophy of ConnectNext and DriveNext. Tata Motors has improved performance and comfort in their 2015 SUV.
Story first published: Tuesday, June 2, 2015, 15:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark