டாடா மெகாபிக்ஸல் காரின் மைலேஜ், சிறப்பம்சங்கள் விபரம் பற்றிய தகவல்கள்!

அதிக மைலேஜ் தருவது மட்டுமின்றி, குறைவான புகை வெளியிடும் தன்மை கொண்ட கார் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த விதத்தில், டாடா தயாரித்து வரும் மெகாபிக்ஸல் கார் வியக்க வைக்கும் மைலேஜ், புகை வெளியிடும் தன்மை கொண்ட மாடலாக வர இருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த குட்டி கார் மாடல் பற்றி, மீண்டும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றன. அதாவது, வரும் ஜனவரியில் இந்த புதிய கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யப்பட திட்டமிட்டிருப்பதாக வெளியானத் தகவல்கள்தான் இந்த காரை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த காரின் சிறப்பம்சங்களை பற்றிய ஒரு செய்திப் பயணத்தை ஸ்லைடரில் காணலாம்.

 சி[கு]ட்டி கார்

சி[கு]ட்டி கார்

நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்து டாடா மெகாபிக்ஸல் உருமாதிரியின் அடிப்படையில், தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மைலேஜ்

மைலேஜ்

நம் கவனத்தை ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் இந்த காரின் மைலேஜ். பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் துணையுடன் ஹைபிரிட் மாடலாக மேம்படுத்தப்பட்டு வரும் இந்த கார் கணக்கீடுகளின்படி, பெட்ரோல் மற்றும் பேட்டரி சார்ஜின் மூலமாக இயங்கும்போது, கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 100 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

இந்த காரில் பெட்ரோல் எஞ்சினுடன், 4 சக்கரங்களிலும் மின் மோட்டார்கள் கொடுக்கப்ப்டடிருக்கின்றன. 13kWh லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மற்ற லித்தியம் அயான் பேட்டரிகளை போன்று அல்லாமல், இது விசேஷ சிறப்பு கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக இந்த கார் மணிக்கு 110 கிமீ வேகம் வரை தொடும்.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

இந்த காரில் இருக்கும் லித்தியம் அயான் பாஸ்பேட் என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த பேட்டரி, வெறும் அரை மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இதன்மூலம், தடங்கல் இல்லா பயணத்தை உறுதி செய்யும்.

பயண தூரம்

பயண தூரம்

ஒருமுறை முழுவதுமாக பெட்ரோல் நிரப்பி செல்லும்போது, 900 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமா, இதன் விசேஷ பேட்டரி சார்ஜின் மூலமாக 87 கிமீ வரை பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல் செல்ல முடியும். எனவே, தினசரி அலுவலகம் செல்வோக்கு வரப்பிரசாதமாக அமையும்.

இடவசதி

இடவசதி

இந்த காரில் விசேஷ இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், 4 பேர் இந்த காரில் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் மூலமாக ஸ்பீக்கர்களை இணைத்துக் கொள்வதற்கான டாக்கிங் ஸ்டேஷன், லெதர் இருக்கைகள், பானோரமிக் கண்ணாடி கூரை போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் இன்னொரு விசேஷமும் இந்த காரில் இருக்கிறது.

 ஸ்லைடிங் கதவுகள்

ஸ்லைடிங் கதவுகள்

பிற கார்களை போன்று அல்லாமல், இந்த காரில் டபுள் ஸ்லைடிங் கதவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக, இடைஞ்சல் இல்லாமல் காருக்குள் ஏறி, இறங்க முடியும்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

இந்த கார் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 22 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். எனவே, இந்தியா மட்டுமின்றி, மாசுக் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் ஐரோப்பிய நாடுகளில் கூட எளிதாக சந்தைப்படுத்த முடியும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக யூகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே, இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட இந்த கார் மாடல் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் திட்டத்தின்படி, சிறப்புச் சலுகைகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்து உறுதியானத் தகவல் வந்தால், அதுகுறித்தும் உடனடியாக வாசகர்களுக்கு தெரிவிக்க காத்திருக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 28, 2015, 16:43 [IST]
English summary
Tata Motor's is planning to launch new Megapixel soon. Tata Megapixel offers a range of up to 900 km (with a single tank of fuel), path-breaking CO2 emission of just 22 gm / km and fuel economy of 100 km / litre (under battery only power).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+