டாடா மோட்டார்ஸின் ஆஸ்பிரே காம்பேக்ட் எஸ்யூவி - தகவல்கள்!

Written By:

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி 300 ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு நேர் எதிராக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

ஆஸ்பிரே என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி 4 மீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

கான்செப்ட்

கான்செப்ட்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் க்ராஸ்ஓவர் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, டீசல் மாடலில்5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2017ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.

 
English summary
Tata Motors have provided the Nexon compact SUV with a codename — Osprey. The codename is derived from a carnivorous bird, which belongs to the North American Raptors family.
Story first published: Monday, November 16, 2015, 11:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark