டாடா மோட்டார்ஸின் பண்டிகை கால ஸ்பெஷல் எடிஷன் கார்கள் அறிமுகம்
பண்டிகைகாலம் நெருங்கி வருவதை ஒட்டி, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் பண்டிகைகால ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. பண்டிகைகால எடிஷன் கார்களில் அந்நிறுவனத்தின் போல்ட், ஜென் எக்ஸ் நானோ, சஃபாரி ஸ்டார்ம் மற்றும் இண்டிகோ உள்ளிட்ட கார்கள் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கிடைக்கிறது. இந்த கார்களின் பட்டியலில், முதலாண்டு கொண்டாட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் ஜெஸ்ட் ஸ்பெஷல் எடிசன் மாடலும் அடங்கும்.
இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த பண்டிகைகால எடிஷன் கார்கள், அடுத்த மாதம் 15ந் தேதி வரை விற்பனையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகைகால கொண்டாட்டங்களை ஒட்டி கேஷ் பேக் ஆஃபரையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆஃபரின் படி, அக்டோபர் 1 முதல் நவம்பர் 15 தேதி வரை கார்களை வாங்கும் டாடா வாடிக்கையாளர்களுக்கு 2000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை திரும்ப பெற முடியும். சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரையிலும் கூட பணத்தை திரும்ப பெற கூடிய வாய்ப்புகள் உள்ளது.
டாடா பயணியர் கார்களின் விற்பனை உயர் அதிகாரி மயாங்க் பரீக், பண்டிகைக்கால வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பண்டிகைகாலங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளவே உள்ளன. எங்கள் நிறுவனத்தின் சார்பாக, வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் பண்டிகை கால எடிஷன் கார்களை அறிமுகம் செய்து கொண்டாடுகின்றோம் என பரீக் தெரிவித்தார். இந்த கார்கள் உயர்தர அம்சங்களுடனும், நிறுவனத்தின் தனித்தன்மையை வெளிபடுத்தும் விதமாகவும் உள்ளது. வரும் காலங்களிலும் இதே போல் சிறந்த தயாரிப்புகளையே வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்க்கொள்ளப்படும் என பரீக் தெரிவித்தார். ஸ்பெஷல் எடிசன் மாடல்களின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாடா ஜென் எக்ஸ் நானோ செலப்ரேஷன் எடிசன்
டாடா ஜென் எக்ஸ் நானோ செலப்ரேஷன் - ஸ்டாண்டர்ட்;
நானோ காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் கூடுதலாக ரிமோட் கண்ட்ரோல்ட் ஹாட்ச் ரிலீஸ், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலை நயம் மிக்க லெதர் இருக்கை கவர்கள் உள்ளன. மேலும், பம்பர் கார்னர் புரொடெக்டர், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்ட அம்சங்களும் இருக்கிறது. சுமார் 11,500 ரூபாய் மதிப்புமிக்க உபகரனங்கள் 10,500 ரூபாய் விலையிலேயே கிடைக்க உள்ளது.
டாடா ஜென் எக்ஸ் நானோ செலப்ரேஷன் - பிரிமியம்;
நானோ செலப்ரேஷன் எடிஷன் கார்களின் பிரிமியம் ரக வேரியண்ட்டில், சன் ரூஃப், டெயில் கேட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறக்கும் வசதி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலை நயம் மிக்க லெதர் இருக்கை கவர்கள் உள்ளது. கூடுதலாக, பம்பர் கார்னர் புரொடெக்டர், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது. சுமார் 27,000 ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் 24,999 ரூபாய்க்கு கிடைக்க உள்ளது.

டாடா போல்ட் செலப்ரேஷன் எடிஷன்;
டாடா போல்ட் செலப்ரேஷன் எடிஷன் கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.17,800 மதிப்பு கொண்ட உபகரணங்கள், 12,900 ரூபாயில் கிடைக்கும்.
இந்த போல்ட் கார்களில், கருப்பு நிற கூரை, பானட் மற்றும் சி-பில்லர்கள், பிரத்யேக ஸ்கஃப் ப்ளேட், ஸ்போர்டியான ரியர் பூட் ஸ்பாயிலர், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது.

டாடா ஃஜெஸ்ட் ஆனிவர்சரி எடிஷன்;
டாடா ஃஜெஸ்ட் ஆனிவர்சரி எடிஷன் கார்கள் புதிய வெளிப்புற நிறங்களையும், வீல் கவர்கள், பியானோ பிளாக் நிறத்திலான சைடு மிரர்களையும் கொண்டுள்ளது. மேலும், ஆனிவர்சரி தீம் கொண்ட பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், ஆனிவர்சரி எடிஷன் பேட்ஜ், ரிமோட் மூலம் கட்டுபடுத்தக்கூடிய பின்புற கண்ணாடிக்கான திரை சீலை, பாட்டில்களை உள்ளடக்க கூடிய கன்சோல், ஸ்கஃப் ப்ளேட் போன்ற அம்சங்களும் இதில் உள்ளது. இந்த ஆனிவர்சரி எடிஷன் மாடலானது, வழக்கமான காரை விட 15,000 ரூபாய் கூடுதலான விலையில் கிடைக்கின்றது.

டாடா ஸஃபாரி செலப்ரேஷன் எடிஷன்;
டாடா ஸஃபாரி செலப்ரேஷன் எடிஷன் மாடலில், போர்டபில் நேவிகேஷன் கருவிகள், பானட் ஸ்கூப், பகல்நேர விளக்குகள், ஹூட் டிஃப்லக்டர், கதவு வைசர்கள், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த உபகரணங்களின் விலை 34,999 ருபாய் ஆகும்.

டாடா இண்டிகோ செலப்ரேஷன் எடிஷன்;
டாடா இண்டிகோ செலப்ரேஷன் எடிஷன் - ஸ்டாண்டர்ட்;
டாடா இண்டிகோ செலப்ரேஷன் எடிஷனின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் கூடுதலாக சீட் கவர், ஸ்டியரிங் சக்கரத்திற்கு கவர், மிதியடிகள், மட் ஃபிளாப், டிரைவர்களுக்கான கிட், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் உபகரணங்களின் விலை 7,000 ரூபாயாக உள்ளது.
டாடா இண்டிகோ செலப்ரேஷன் எடிஷன் - பிரிமியம்;
டாடா இண்டிகோ செலப்ரேஷன் எடிஷனின் பிரிமியம் ரக கார்கள் ஆடியோ சிஸ்டம், இருக்கை கவர்கள், ஸ்டியரிங் சக்கர கவர்கள், மேட்ஸ், மண் ஃபிளாப், டிரைவர்களுக்கான கிட், செலப்ரேஷன் எடிஷன் பாடி கிராஃபிக்ஸ், செலப்ரேஷன் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்ட மசங்களை கொண்டுள்ளது. இதன் உபகரணங்களின் விலை 10,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications








