கூடுதல் சக்தியுடன் விற்பனைக்கு வந்தது டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி!
மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் கூடுதல் சக்தி கொண்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ், சமீபகாலமாக பல்வேறு புதிய அறிமுகங்கள் செய்வதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். டாடா சஃபாரி ஸ்ட்ராம் வேரிகோர் 400 என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிரைவ் தேர்வுகள்;
விஎக்ஸ் வேரியண்ட்டின் டாடா சஃபாரி ஸ்ட்ராம், 4x2 டிரைவ் தேர்வு மற்றும் 4x4 டிரைவ் தேர்வு என்ற 2 டிரைவ் தேர்வுகளில் (டிரைவ் ஆப்ஷன்) கிடைக்கின்றது.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், திறன் (பெர்ஃபார்மன்ஸ்) மற்றும் உதிரி பாகங்கள் தொடர்பாக பல்வேறு அம்சங்கள், இந்த புதிய வேரியண்டில் சேர்க்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;
டாடா வேரிகோர் 400 சஃபாரி ஸ்ட்ராம், விடிடி எனப்படும் வேரியபில் டர்பைன் டெக்னாலஜி உடைய 2.2 லிட்டர், டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 153.86 பிஹெச்பி-யையும் மற்றும் 400 என்எம் டார்க் என்ற அளவிலான கூட்டபட்ட திறனை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த டாடா வேரிகோர் 400 சஃபாரி ஸ்ட்ராம் காரின் 4x2 டிரைவ் தேர்வு மற்றும் 4x4 டிரைவ் தேர்வுகளில், ஈஎஸ்ஓஃப் எனப்படும் எலக்ட்ரானிக் ஷிஃப்ட் ஆன் - ஃபிலை டெக்னாலஜியை, 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு;
பாதுகாப்பை பொருத்த வரை, டாடா வேரிகோர் 400 சஃபாரி ஸ்ட்ராம் காரில் ஏராளமான புதிய அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.
இந்த புதிய எஸ்யூவி கார், ட்யூவல் (இரட்டை) எஸ்ஆர்எஸ் ஏர்பேகுகள், ஈபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரீபியூஷனுடன் கூடிய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
மேலும், இதில் கொள்ளாப்ஸிபில் ஸ்டியரிங் காலம்ன், க்ரம்பிள் ஃஜோன்ஸ், 4 கதவுகளிலும் சைட் இண்ட்ரூஷன் பீம்கள் உள்ளிட்டவை உள்ளன.

இண்டீரியர்;
சஃபாரி ஸ்ட்ராம் காரின், இந்த விஎக்ஸ் வேரியண்ட், டேஷ்போர்ட் மற்றும் டோர் ஹேண்டில்களில் (கதவு கைப்பிடி) சில்வர் ஆக்ஸண்ட் கொண்ட புதிய ஜாவா பிளாக் தீம் வழங்கபட்டுள்ளது.
புதிய மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டியரிங் வீல் உடன் கூடிய ஹர்மன் நிறுவனத்தின் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் வசதியும் இதில் சேர்க்கபட்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும், வேரிகோர் 400 சஃபாரி ஸ்ட்ராம் கார், 4 வேரியண்ட்களிலும், 5 வண்ணங்களிலும் கிடைக்கின்றது.
இந்த சஃபாரி ஸ்ட்ராம், ஆர்க்டிக் சில்வர், ஆஸ்டெர்ன் பிளாக், ஆர்க்டிக் வைட், அர்பன் வைட் மற்றும் பியர்ல் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது.

விலை விவரங்கள்;
புதிய விஎக்ஸ் வேரியண்ட் கார்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
4x2 டிரைவ் தேர்வு சஃபாரி ஸ்ட்ராம் விஎக்ஸ் வேரியண்ட் - 13.25 லட்சம் ரூபாய்
4x4 டிரைவ் தேர்வு சஃபாரி ஸ்ட்ராம் விஎக்ஸ் வேரியண்ட் - 14.59 லட்சம் ரூபாய்
குறிப்பு; இந்த விலை விவரங்கள், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை என்பது குறிப்பிடதக்கது.

கூடுதல் சலுகைகள்;
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும், வேரிகோர் 400 சஃபாரி ஸ்ட்ராம் கார் வாங்கும் போது, மூன்று வருடம் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி வழங்கபடுகிறது.
இந்த சலுகை நீட்டித்து கொள்ள கூடியது என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








