அடுத்து ஒரு காம்பேக்ட் செடான் காரை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்

Written By:

ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் வரும் புதிய டாடா ஸீக்கா கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் அடிப்படையில் ஓர் மினி செடான் காரும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

டாடா ஸெஸ்ட் காரை விட குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. டாடாவிடமிருந்து அடுத்து ஓர் மினி செடான் கார் எனும்போதே, புருவம் உயர்கிறதல்லவா?

வாருங்கள், இந்த புதிய கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் பகிர்ந்து கொள்வோம்.

பெயர்

பெயர்

டாடா ஸீக்கா அடிப்படையிலான காம்பேக்ட் செடான் கார் ஸ்வே என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

டாடா ஸீக்கா கார் உருவாக்கப்பட்ட அதே X0 பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்படுகிறது. எனவே, டாடா ஸீக்கா காரில் பூட்ரூம் ஒட்டப்பட்ட மாடலாகவே இருக்கும் என்பதோடு, வெளிப்புறம், உட்புற டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்காது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

டாடா ஸீக்கா காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின்களே, புதிய டாடா ஸ்வே காரிலும் பயன்படுத்தப்படும்.

ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

டாடா ஸீக்கா கார் முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று, டாடா ஸீக்கா காரின் மினி செடான் மாடலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் அறிமுகம் செய்யப்படும்.

டிரைவிங் ஆப்ஷன்கள்

டிரைவிங் ஆப்ஷன்கள்

டாடா ஸீக்கா காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. இதே ஆப்ஷன்களை டாடா ஸ்வே காரிலும் வழங்கப்படும்.

பிரிமியம்

பிரிமியம்

ஹூண்டாய் எக்ஸென்ட் காருடன் போட்டி போடும் விதத்தில், சற்று பிரிமியமான மாடலாக இது இருக்கும். டாடா ஸ்வே காரில் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் மற்றும் வாய்ஸ் கமாண்ட் போன்ற பல்வேறு வசதிகள் கொண்டதாக இருக்கும்.

ஸ்டைல்

ஸ்டைல்

டாடா ஸெஸ்ட் காரைவிட மிக ஸ்டைலான மினி செடான் மாடலாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என்பதால், நிச்சயம் ஓர் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பு: மாதிரிக்காக டாடா ஸீக்கா காரின் படங்கள் பயன்டுத்தப்பட்டுள்ளன.

English summary
Tata is coming up with yet another introduction, this time a Compact Sedan. Tata Zica Compact Sedan Would be Named As Sway according to reports.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark