டாடா ஸீக்கா காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியானது

By Saravana

ரூ.4 லட்சத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய டாடா ஸீக்கா காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கைட் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இந்த கார் முதல்முறை கார் வாங்குவோர்க்கும், பட்ஜெட் விலையில் புதிய கார் மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கும் சிறந்த சாய்ஸாக இருக்கும் என கருதப்படுகிறது.

புது டிசைன்

புது டிசைன்

வழக்கமான டாடா ஹேட்ச்பேக் கார்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் அமைப்பில் வருகிறது. பட்ஜெட் விலை மாடல்களில் மிகச்சிறப்பான டிசைன் கொண்ட மாடலாக கூற முடியும்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

புனே, இத்தாலியிலுள்ள டூரின் மற்றும் இங்கிலாந்திலுள்ள கோவென்ட்ரியிலுள்ள டாடா மோட்டார்ஸ் டிசைன் ஸ்டூடியோக்கள் இணைந்து இந்த காரை வடிவமைத்து இருக்கின்றன.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட XO பிளாட்ஃபார்மில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. டாடா இண்டிகா இவி2 காருக்கு மாற்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. டாடா ஸெஸ்ட், போல்ட் கார்களில் பயன்படுத்தப்பட்ட அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், புதிய டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

முதலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்ட மாடலாக டாடா ஸீக்கா விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

போட்டி

போட்டி

மாருதி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்களுடன் இந்த புதிய டாடா ஸீக்கா போட்டி போடும். குறிப்பாக, குறைவான விலை கொண்ட டீசல் கார்களில் இந்த காருக்கு முக்கிய இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Article Published On: Tuesday, December 1, 2015, 10:14 [IST]
English summary
The next big thing from Tata Motors is their compact hatchback, codenamed 'Kite'. Recently, Tata christened this product and revealed to us its name 'Zica'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+