டாடா ஸீக்கா கார் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

By Saravana

பட்ஜெட் விலையில் கார் வாங்க திட்டமிடுவோர்க்கு ஓர் சிறப்பான மாடலாகவும், அருமையான தேர்வாகவும் வருகிறது டாடா ஸீக்கா. அதிக இடவசதி, ஸ்டைலான தோற்றம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஓர் சிறப்பான மாடலாக வர இருக்கும் இந்த புதிய பட்ஜெட் கார் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

ரெனோ க்விட், மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் ஐ10 கார்களைவிட மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, புதிய ஃபோர்டு ஃபிகோ கார்களை தேர்வு செய்து வைத்துள்ளவர்களையும், தன்பால் ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் தொழில்நுட்ப விபரங்களையும், வசதிகள் குறித்த தகவல்களையும் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த காரின் தகவல்களையும், அதிகாரப்பூர்வ படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்கள் விபரம்

எஞ்சின்கள் விபரம்

இந்த காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஞ்சின் குடும்ப வரிசையில் உருவாக்கப்பட்டிருக்கும், 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் ரெவோடார்க் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 3 சிலிண்டர் ரெவோட்ரான் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லதாக இருக்கும். டீசல் மாடலில் இருக்கும் 3 சிலிண்டர் காமன்ரயில் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிரைவிங் ஆப்ஷன்கள்

டிரைவிங் ஆப்ஷன்கள்

டாடா ஸெஸ்ட், போல்ட் கார்களை போன்றே இந்த புதிய டாடா ஸீக்கா காரின் பெட்ரோல் மாடலில் சிட்டி மற்றும் ஈக்கோ என்ற இருவிதமான டிரைவிங் ஆப்ஷன்களில் ஓட்டுவதற்கான வசதியுடன் வருகிறது. டீசல் மாடலில் இருக்கும் புதிய ரெவோடார்க் டீசல் எஞ்சினும் இப்போது ஈக்கோ மற்றும் சிட்டி டிரைவிங் ஆப்ஷன் வசதியுடன் வருகிறது மனதில் வைக்கவும்.

வடிவம்

வடிவம்

நீளம்: 3,746மிமீ

அகலம்: 1,647மிமீ

உயரம்: 1,535மிமீ

வீல்பேஸ்: 2,400மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 170மிமீ

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் 1,012கிலோ எடையையும், டீசல் மாடல் 1,080கிலோ எடையையும் கொண்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

மைலேஜ் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும் வழங்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பூட்ரூம்

பூட்ரூம்

டாடா ஸீக்கா காரில் 240 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதியுடன் வருகிறது. தினசரி பயன்பாடு மற்றும் சிறிய குடும்பத்தினருக்கான தேவையை பூர்த்தி செய்யும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரிலும் ஹார்மன் நிறுவனத்தின் கனெக்ஷன்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. அதாவது புதிய சஃபாரி எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் அதே யூனிட்தான் இதிலும் இடம்பெற உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் டியூனர், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் பெரிய திரையுடன் கூடியதாக இருக்கும். மேலும், ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெறவும் வழி இருக்கிறது.

இரண்டு அப்ளிகேஷன்கள்

இரண்டு அப்ளிகேஷன்கள்

டாடா ஸீக்கா காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேவிகேஷன் அப்ளிகேஷன் மற்றும் ஜூக் ஆப் என்ற இரு அப்ளிகேஷனுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை புளூடூத் வழியாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டு நேவிகேஷன் வசதியை பெறலாம். இரண்டாவது, ஜூக் அப்ளிகேஷன் மூலமாக பாடல்களை எளிதாக கேட்க வசதி செய்கிறது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

புதிய டாடா ஸீக்கா காரில் முன்புறத்திற்கு இரட்டை ஏர்பேக்குகள், பிரேக் பவரை சரியான விகிதத்தில் வீல்களுக்கு அனுப்பும் இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வளைவுகளில் காரை நிலைதடுமாறாமல் செலுத்துவதற்கான கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

ஸ்டோரேஜ் வசதி ஏராளம்

ஸ்டோரேஜ் வசதி ஏராளம்

தண்ணீர் பாட்டில்கள் உள்பட பொருட்களை வைப்பதற்காக 22 ஸ்டோரேஜ் வசதிகள் உட்புறத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இடவசதி

இடவசதி

இந்த காரின் முக்கிய அம்சமாக அதிக இடவசதி கொண்டதாக இருக்கும் என்று நம்பலாம். பிற டாடா கார்களை போன்றே, இடவசதியில் வாடிக்கையாளர்களை கவரும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4.0 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய டாடா ஸீக்கா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, December 3, 2015, 15:55 [IST]
English summary
The Zica is the latest entrant in a highly competitive segment. Spacious and stylish. Affordable and practical. Here is what the Tata Zica has to offer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+