இந்தியாவில், 80 புதிய டீலர்களை திறக்கும் டெர்ரா மோட்டார்ஸ்!
மின்சாரத்தில் இயங்கும் வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானை சேரந்த டெர்ரா மோட்டார்ஸ் இந்திய மார்க்கெட்டில் வலுவாக காலூன்ற திட்டமிட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டிற்குள் தனது டீலர்ஷிப் எண்ணிக்கையை 80 ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக மிகச்சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க்கை வைத்திருக்க விரும்புவதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி செகி கூறியுள்ளார்.

மேலும், கட்டுறுதி, நீடித்த உழைப்பு, செயல்திறன் மி்க்க பேட்டரி ஆகியவை எங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று கருதுவதாகவும் அவர் கூறினார்.
டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களை இந்த டீலர்ஷிப்புகள் மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








