இந்தியாவில் எலக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை தயாரிக்க டெஸ்லா திட்டம்!

இந்தியாவில், எலக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை தயாரிக்க அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்களுக்கு தேவைப்படும் லித்தியம்-இயான் பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஜிகா ஃபேக்டரி என அழைக்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையை பார்வையிட்டு, டெஸ்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்தார். இதன் விளைவாக, டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், ஒரு ஜிகா ஃபேக்டரியை இந்தியாவில் நிறுவ திட்டம் கொண்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Tesla Considering India For Manufacturing Electric Car Batteries

இத்தகைய ஜிகா ஃபேக்டரியை சீனாவில் ஒன்றும், ஐரோப்பாவில் ஒன்றும் அமைக்கப்படும் என எலோன் மஸ்க் தெரிவித்தார். இந்தியாவில் அமைக்கபட உள்ள ஜிகா ஃபேக்டரி, இங்குள்ள எலட்ரிக் வாகனங்களுக்கான எலக்ட்ரிக் பேட்டரி தேவைகளை பூர்த்தி செய்யும்.

தூய்மையான மற்றும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் மாசற்ற வருங்காலத்தை உருவாக்க, பல்வேறு நாடுகள் மின்சார வாகனங்களை உபயோகிக்க தொடங்கியுள்ளன. டெஸ்லா வாகனங்களுக்கு, சீனா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. சீனாவில், மூன்றாவது காலாண்டில் மட்டும் 1300-க்கும் கூடுதலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்றுள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவை பொருத்த வரை, மஹிந்திராவின் ஈ2ஓ எலக்ட்ரிக் வாகனம் தான் ஒரே மாடலாக உள்ளது.

Tesla is Considering India For Manufacturing Electric Car Batteries

சுற்றுசூழலை பாதிக்காத வாகனங்களின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை அதிகரிக்க, சிறப்பு மானிய திட்டத்தின் கீழ், ஊக்கதொகையை வழங்கி வருகிறது.

ஃபேம் என்பது ஃபாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மேனுஃபேக்சரிங் ஆஃப் எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ் என்பதாகும். நேஷனல் எலக்ட்ரிக் மொபைலிட்டி மிஷன் பிளான் என்ற பெயரில், எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் உபயோகத்தை அதிகரிக்க உருவாக்கபட்ட தேசிய அளவிலான திட்டத்தின் கீழ் இந்த ஊக்கதொகை வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 30, 2015, 8:27 [IST]
English summary
Tesla is Considering India For Manufacturing of Electric Car Batteries. This Production unit will produce lithium-ion battery packs for electric vehicles. Facilities that produce battery packs for electric vehicles are known as ‘Gigafactory'.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+