செவர்லேயின் குளு குளு ஆஃபர்... கார் டெஸ்ட் டிரைவ் செய்தால் சுவிட்சர்லாந்து ட்ரிப்!

Posted By:

கோடை வெயிலின் தகிப்பிலிருந்து தப்புவதற்கான ஓர் ஸ்பெஷல் ஆஃபரை செவர்லே கார் நிறுவனம் அறிவித்துள்ளது. செவர்லே கார்களை டெஸ்ட் டிரைவ் செய்பவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பை இந்த ஆஃபர் மூலம் பெற முடியும்.

வரும் 31ந் தேதிக்குள் டெஸ்ட் டிரைவ் செய்பவர்கள் இந்த குளு குளு ஆஃபரை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஆஃபர் மூலம் இரண்டு பேர் சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளை செவர்லே வழங்குகிறது. விமான டிக்கெட், தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவீனங்களை செவர்லே ஏற்றுக்கொள்ளும்.

Chevy Offer
 

தாமதிக்காமல் உடனடியாக இந்தப் பக்கத்தில் இருக்கும் செவர்லே விளம்பரங்களை க்ளிக் செய்தோ அல்லது படத்தை க்ளிக் செய்தோ, உங்களது விபரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த குளு குளு ஆஃபர் தவிர, சிறப்பு கடன் திட்டங்களையும் தனது கார்களுக்கு செவர்லே அறிவித்துள்ளது. செவர்லே ஸ்பார்க் காரை ரூ. 4,999 மாதத் தவணையிலும், பீட் காரை ரூ.6,999 மாதத் தவணையிலும், செயில் ஹேட்ச்பேக் காரை ரூ.7,199 மாதத் தவணையிலும், செவர்லே செயில் செடான் காரை ரூ.8,299 மாதத் தவணையிலும் வாங்குவதற்கான சிறப்பு கடன் திட்டங்களையும் செவர்லே அறிவித்துள்ளது.

செவர்லே என்ஜாய் எம்பிவி காரை ரூ.9,599 மாதத் தவணையிலும், செவர்லே க்ரூஸ் செடான் காரை ரூ.22,999 மாதத் தவணையிலும் சிறப்பு கடன் திட்டங்கள் வாயிலாக வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

English summary
Test Drive Your Favorite Chevrolet And Win A Trip To Switzerland.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark