அக்டோபர் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார்கள்...!!

By Saravana

பண்டிகை காலம் துவங்கிய செப்டம்பரில் விற்பனையில் சில மாடல்கள் முன்னிலையில் இருந்த நிலையில், கடந்த மாதம் சில மாடல்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை பதிவு செய்தது.

மேலும், இதுவரை இல்லாத அளவு மாருதி டிசையரின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. கடந்த மாதத்தில் விற்பனையில் டாப் 10 கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

கடந்த மாத விற்பனையின்படி, டாப் 10 பட்டியலில் 9வது இடத்தை ஹோண்டா அமேஸ் கார் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 6,971 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, சிறிதளவு உயர்ந்திருக்கிறது. காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் மாருதி டிசையருக்கு அடுத்து, ஹோண்டா அமேஸ் கார்தான் விற்பனையில் சிறப்பாக இருக்கிறது. டிசைன் மற்றும் அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் என இரண்டும் இந்த காரின் மார்க்கெட்டை ஸ்திரமாக வைத்திருக்கிறது.

09. ஹோண்டா சிட்டி

09. ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த மாத விற்பனையின்படி, டாப் 10 பட்டியலில் 8வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 7,022 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அசத்தலான டிசைன், சக்திவாய்ந்த டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின் மற்றும் தரம் போன்றவை இந்த காரின் மதிப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

08. ஹூண்டாய் க்ரெட்டா

08. ஹூண்டாய் க்ரெட்டா

எட்டாவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி உள்ளது. கடந்த மாதத்தில் 7,225 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அசத்தலான டிசைன், எஞ்சின் ஆப்ஷன்கள் இந்த எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. ஆனால், எஸ்யூவி மார்க்கெட் என்று வரும்போது மஹிந்திரா பொலிரோவிடம் பின்வாங்கி இரண்டாம் இடத்தை பிடித்தது.

07. மஹிந்திரா பொலிரோ

07. மஹிந்திரா பொலிரோ

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் சொந்த பங்காளியாக வந்த மஹிந்திரா டியூவி300 போன்ற புதிய மாடல்களால் சற்று கால் இடறி பின்தங்கிய மஹிந்திரா பொலிரோ மீண்டும் எஸ்யூவி மார்க்கெட்டில் முதலிடத்தையும், டாப் 10 பட்டியலில் ஏழாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. ஊரக பகுதிகளில் மஹிந்திரா பொலிரோவுக்கு இருக்கும் மவசை புதிய மாடல்களால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை. எஸ்யூவி செக்மென்ட்டில் நான்தான் ராஜா என்று தனது விற்பனையின் மூலமாக நிரூபித்துள்ளது. கடந்த மாதம் 7,754 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

06. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்

06. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்

டிசைன், வசதிகள் என வாடிக்கையாளர்களுக்கு புதிய அந்தஸ்தையும், மன நிறைவையும் வழங்கிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 11,019 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த விற்பனையின்படி, டாப் 10 பட்டியலில் 6வது இடத்தை பிடித்தது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்

கடந்த மாதம் 5வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பிடித்தது. பட்ஜெட் விலையில் ஓர் சிறந்த பிரிமியம் மாடல் போன்ற உணர்வும், வசதிகளும் இந்த காருக்கான மார்க்கெட்டை நிலையாக வைத்திருக்கிறது. அத்துடன், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனையும் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் 14,079 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

நான்காம் இடத்துக்கு அதிபதியான மாருதி வேகன் ஆர் காரின் விற்பனையும் சிறப்பாக இருந்தது. கடந்த மாதம் 17,734 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடக்கமான வடிவம், சிறப்பான ஹெட்ரூம், குறைவான பராமரிப்பு போன்றவை இந்த காருக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் மூன்றாவது இடத்தை மாருதி ஸ்விஃப்ட் கார் பிடித்தது. கடந்த மாதம் 17,669 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், கையாளுமை, அதிக மைலேஜ், சரியான விலை, குறைவான பராமரிப்பு என மாருதி ஸ்விஃப்ட் காரை வாடிக்கையாளர்கள் மொய்க்க பல காரணங்கள் இருக்கின்றன.

02. மாருதி ஆல்ட்டோ

02. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் இரண்டாவது இடத்தை மாருதி ஆல்ட்டோ கார் பிடித்தது. மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களின் விற்பனை 22,861 என்று பதிவாகியது. மேலும், மாருதியின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறைவான பராமரிப்பு, மாருதியின் சர்வீஸ் கட்டமைப்பு இந்த காரின் விற்பனையை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், வரும் மாதங்களில் புதிய ரெனோ க்விட் காரின் வருகையால் இந்த காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

விற்பனையில் மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 கார் என்ற பெருமையை மாருதி டிசையர் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 24,502 மாருதி டிசையர் கார் பெற்றிருக்கிறது. 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரையிலான விற்பனையில் மேலும் ஒரு அதிகபட்ச விற்பனையை தொட்டு சாதனை படைத்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பராமரிப்பு செலவீனம், அதிக மைலேஜ், சரியான விலையில் கிடைப்பதும், மாருதியின் சர்வீஸ் கட்டமைப்பும் இந்த காரின் விற்பனையை புதிய உச்சங்களை தொடச் செய்து வருகிறது.

 ரெனோ க்விட் அலை

ரெனோ க்விட் அலை

ரெனோ க்விட் காருக்கான முன்பதிவு 50,000ஐ கடந்து சாதனை படைத்திருக்கிறது. எனவே, வரும் மாதங்களில் மாருதி ஆல்ட்டோ காருக்கு கடும் நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கலாம். அதேபோன்று, பட்டியலில் இருந்து மாருதி செலிரியோ கார் விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி, டீசல் எஞ்சின் என கொடுத்தும் மாருதி செலிரியோ அதிரடியாக குறைந்து வருவது மாருதிக்கு நெருக்கடி தரும் விஷயமாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2015, 18:29 [IST]
English summary
Let's take a look at top 10 selling cars for the month of October 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+