ஏற்றுமதியில் இந்தியாவின் டாப் 10 கார்கள் - 7 மாடல்கள் 'மேட் இன் சென்னை'!!

By Saravana

உள்நாட்டு விற்பனையில் டாப் - 10 இடங்களை மாருதி, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் அதிகபட்ச இடங்களை தக்க வைத்து வருகின்றன. ஆனால், ஏற்றுமதி பட்டியலை பார்த்தால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது.

மேலும், ஏற்றுமதியில் நீண்ட காலமாக முன்னிலை வகித்து வந்த ஹூண்டாய் ஐ10 கார் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதுதவிர, இந்தியாவின் கார் ஏற்றுமதி மையமாக சென்னை விளங்குவதற்கு, இந்த பட்டியலும் ஓர் சாட்சியாக இருக்கும்.

ஆம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 2014 - 15 நிதி ஆண்டில் ஏற்றுமதியில் இந்தியாவின் டாப் 10 கார் மாடல்களில் 7 கார் மாடல்கள் சென்னையில் தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

10. ஃபோர்டு ஃபிகோ

10. ஃபோர்டு ஃபிகோ

சென்னை, மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு ஆலையில் தயாரிக்கப்படும் ஃபிகோ கார் கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதியில் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 23,368 ஃபிகோ கார்களை ஃபோர்டு ஏற்றுமதி செய்துள்ளது.

 09. ஹூண்டாய் ஐ10

09. ஹூண்டாய் ஐ10

இதுவும் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. முதலிடத்தில் இருந்து வந்த ஹூண்டாய் ஐ10 கார், அதற்கு இணையாக வந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வரவால் மார்க்கெட்டை இழந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. கடந்த நிதி ஆண்டில் 23,961 ஹூண்டாய் ஐ10 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய 2013- 14 நிதி ஆண்டில் 1,09,074 ஹூண்டாய் ஐ10 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

08. மாருதி ஏ- ஸ்டார்

08. மாருதி ஏ- ஸ்டார்

மாருதியின் முக்கிய ஏற்றுமதி மாடலாக விளங்கி வந்த ஏ- ஸ்டார் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக செலிரியோ வந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் 28,697 ஏ ஸ்டார் கார்களை மாருதி ஏற்றுமதி செய்தது.

 07. மாருதி ஆல்ட்டோ

07. மாருதி ஆல்ட்டோ

உள்நாட்டு விற்பனயைில் நம்பர்- 1 ஆக விளங்கி வரும் மாருதி ஆல்ட்டோ பிராண்டு வெளிநாடுகளில் பெரிய அளவில் எந்த வரவேற்பும் இருக்கவில்லை. கடந்த நிதி ஆண்டில் 31,594 ஆல்ட்டோ கார்களை மாருதி ஏற்றுமதி செய்திருக்கிறது. உள்நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 20,000 மேற்பட்ட ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகும் நிலையில், ஓர் நிதி ஆண்டில் மொத்தமாகவே 31,594 ஆல்ட்டோ கார்களை மட்டுமே மாருதி ஏற்றுமதி செய்திருக்கிறது.

06. ஹூண்டாய் ஐ20

06. ஹூண்டாய் ஐ20

பட்டியலில் ஆறாவது இடத்தில் ஹூண்டாய் ஐ20 கார் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 38,144 ஐ20 கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதுவும் சென்னையில் உற்பத்தி செய்யும் மாடல்தான்.

05. நிசான் சன்னி

05. நிசான் சன்னி

கடந்த நிதி ஆண்டில் 38,759 நிசான் சன்னி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்த காரும் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

 04. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

04. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

கடந்த நிதி ஆண்டில் 55,178 ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை ஃபோர்டு நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

 03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

கடந்த நிதி ஆண்டில் 56,064 ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

02. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

02. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த நிதி ஆண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் மாடல்களின் டாப் 10 பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 2வது இடத்தில் இருக்கிறது. சில ஆண்டுகளாக ஏற்றுமதியில் முன்னிலை வகித்து வந்த அதே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 கார் இடத்தை இந்த புதிய மாடல் பெற்றிருப்பது புலனாகிறது.

01. நிசான் மைக்ரா

01. நிசான் மைக்ரா

உள்நாட்டில் படு சொதப்பலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் நிசான் மைக்ரா ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 76,120 நிசான் மைக்ரா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்றுமதியில் நம்பர் -1 இடத்தில் இருக்கும் நிசான் மைக்ரா காரும் சென்னையில்தான் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 11, 2015, 11:14 [IST]
English summary
Top 10 Cars Exported From India Last Fiscal Year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+