இந்தியாவில் அதிகம் ரீகால் செய்யபட்ட டாப் 10 கார்களின் பட்டியல் - முழு விவரங்கள்
இந்தியாவில் அதிகம் ரீகால் செய்யபட்ட கார்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
ரீகால் அல்லது திரும்ப அழைக்கபடுதல் என்பது, வாகனங்கள் பழுது ஏற்படும் போது, அவற்றை சரிசெய்வதற்காக, குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனம் மூலம் மேற்கொள்ளபடும் நடவடிக்கையாகும்.
வாகனங்களில் சிறிய தவறுகள் அல்லது கோளாறுகள் இருந்தால் கூட, தங்களின் வாகனங்களை ரீகால் செய்ய தயங்குவதில்லை. ஆனால், இப்படி செய்வதினால், ஒரு குறிப்பிட்ட வாகனத்தின் தயாரிப்பை வாங்கும் முடிவு செய்யும் முன், வாடிக்கையாளர்கள், ஒன்றுக்கு பல முறை சிந்திப்பார்கள் என்பது மட்டும் உறுதியான உண்மையாகும்.
இது வரை, இந்தியாவில் எந்த டாப் 10 கார்கள், என்ன காரணத்திற்காக திரும்ப ரீகால் செய்யபட்டது என்பதை வரும் ஸ்லைடர்களில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

10) நிஸ்ஸான் சன்னி;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 21,402
அதிகமாக ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், நிஸ்ஸான் சன்னி 10-வது இடத்தில் உள்ளது.
2013-ஆம் ஆண்டில், நிஸ்ஸான் நிறுவனம், பிரேக் மாஸ்டர் சிலிண்டர் சீல் கோளாறை சரி செய்ய, தங்களின் 15,902 சன்னி கார்களை ரீகால் செய்தது.
இதையடுத்து, குறைபாடான ஏர்பேக்-களையும், இஞ்ஜின் ஸ்விட்ச்களையும் சரி செய்ய, 2015-ஆம் ஆண்டில் 5,500 கார்களை ரீகால் செய்தது.

9) மஹிந்திரா ஸ்கார்பியோ;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 24,504
அதிகமாக ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், மஹிந்திரா ஸ்கார்பியோ 9-ஆம் இடத்தில் உள்ளது.
2013-ஆம் ஆண்டில், மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியின் ஈஎக்ஸ் வேரியண்டின், பிரஷர் ரெகுலேடிங் வால்வில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்ய 985 கார்கள் ரீகால் செய்யபட்டது.
மேலும், 2014-ஆம் ஆண்டிலும், அதே ஈஎக்ஸ் வேரியண்டின் பிரஷர் ரெகுலேடிங் வால்வில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்ய, 23,519 கார்கள் ரீகால் செய்யபட்டது.

8) ஃபோர்டு பியஸ்டா கிளாஸிக்;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 25,871-க்கும் அதிகமான கார்கள்
அதிகமாக ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் 8-வது இடத்தில் உள்ளது.
2012-ஆம் ஆண்டில், ஃபோர்டு பியஸ்டா மற்றும் ஃபோர்ட் ஹேட்ச்பேக்கள் உட்பட 1,28,655 கார்களை ஃபோர்டு நிறுவனம் ரீகால் செய்தது.
இதேபோல், 2013-ஆம் ஆண்டில், ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் காரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய 25,871 கார்களை ஃபோர்டு நிறுவனம் ரீகால் செய்திருந்தது.

7) ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 38,224
அதிக அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 7-வது இடத்தில் உள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல், ஃபோர்டு நிறுவனம் சார்பாக ரீகால் செய்யபட்ட கார்களில் இரண்டாவது மாடலாக உள்ளது. க்லோ பிளக் ரீலொகேஷனில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, 972 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் 2013-ஆம் ஆண்டில் ரீகால் செய்யபட்டது.
அடுத்ததாக, ஃப்யூவல் லைன் மற்றும் ஏர்பேக்-களில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்வதற்காக 20,700 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள், 2014-ஆம் ஆண்டில் ரீகால் செய்யபட்டது.
மீண்டும், விபத்துகளின் ஆபத்துகளை அதிகரிக்க கூடிய வகையில், ரியர் சஸ்பென்ஷன் பகுதியில் இருந்த கோளாறுகளை சரி செய்ய நவம்பர் 2015-ல், 16,500 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்கள் ரீகால் செய்யபட்டது.

6) டொயோட்டா இன்னோவா;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 44,989
அதிக எண்ணிக்கைகளில், ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், டொயோட்டா இன்னோவா 6-வது இடத்தில் உள்ளது.
டொயோட்டா நிறுவனமும் தங்கள் நிறுவனம் சார்பாக மிக அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் ஒன்றான டொயோட்டா இன்னோவாவை, ஸ்டீயரிங் வீலின் பாகங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரீகால் செய்தது.
இந்த குறிபிட்ட கோளாறு காரணமாக, 2014-ஆம் ஆண்டில், 44,989 டொயோட்டா இன்னோவா ரீகால் செய்யபட்டது.

5) மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர்;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 55,548
அதிகமான அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர் 5-வது இடத்தில் உள்ளது.
எந்த மாடல் காரும் அதிகமான அளவில் விற்பனையாகும் போது, அது ரீகால் செய்யபடும் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். குறைபாடான ஸ்டீயரிங் காலம்ன்களால் (நெடுவரிசை), 2013-ஆம் ஆண்டில் 581 மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர் காம்பேக்ட் செடான்கள் ரீகால் செய்யபட்டது.
ஃப்யூவல் ஃபில்லர் நெக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 2014-ல் 42,481 மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர் கார்களின் ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
மேலும் ஒரு கோளாறை சரி செய்ய 2014-ஆம் ஆண்டில், 12,486 கார்கள் திரும்ப அழைக்கபட்டது.

4) மஹிந்திரா எக்ஸ்யூவி500;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 84,695
அதிக அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 4-வது இடத்தில் உள்ளது.
2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 84,695 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ரீகால் செய்யபட்டுள்ளது.
முதலாவதாக, 2013-ஆம் ஆண்டில், எண்ணெய் கசிவு பிரச்சனை தொடர்பாக 24,695 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்கள் ரீகால் செய்யபட்டது.
சைட் (பக்கவாட்டில்) கர்டெய்ன் ஏர்பேக்-களின் மென்பொருளை மேம்படுத்துவதற்காக, 2015-ஆம் ஆண்டில் 60,000 எக்ஸ்யூவி500 கார்கள், மஹிந்திரா நிறுவனம் மூலம் ரீகால் செய்யபட்டிருந்தது.

3) செவர்லே தவேரா;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 1,14,000
அதிக அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், செவர்லே நிறுவனத்தின் செவர்லே தவேரா 3-வது இடத்தில் உள்ளது.
மாசு வெளிப்பாடு மற்றும் விவரக்குறிப்பு தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய 2013-ஆம் ஆண்டில் 1,14,000 செவர்லே தவேரா கார்கள் திரும்ப ரீகால் செய்யபட்டது.

2) ஃபோர்டு ஃபிகோ;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 1,40,000-ற்கும் கூடுதலான கார்கள்
அதிக அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோர்டு ஃபிகோ 2-வது இடத்தில் உள்ளது.
ஃபோர்டு நிறுவனம் தங்களின் ஃபோர்டு ஃபிகோ காரை இரண்டு சந்தர்பங்களில் ரீகால் செய்தது. கோளாறான ரியர் ட்விஸ்ட் பீம் பிரச்னை காரணமாக, 2012-ஆம் ஆண்டிலும், 2013-ஆம் ஆண்டுகளிலும் சேர்த்து 1,09,469 ஃபோர்டு ஃபிகோ கார்கள் ரீகால் செய்யபட்டது.
பவர் ஸ்டீயரிங்க் ஹோஸில் ஏற்பட்ட கசிவு தொடர்பான கோளாறு காரணமாக, 30,681 கார்கள் ரீகால் செய்யபட்டிருந்தது.

1) ஹோண்டா சிட்டி;
ரீகால் செய்யபட்ட கார்களின் எண்ணிக்கை : 1,89,705 கார்கள்
மிக அதிக அளவில் ரீகால் செய்யபட்ட 10 கார்களின் பட்டியலில், ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி முதலாவது இடத்தில் உள்ளது.
ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவின் தயாரிப்புகளில், ஹோண்டா சிட்டி தான் மிக அதிகமாக விற்பனையாகும், மற்றும் மிக அதிகமாக ரீகால் செய்யபட்ட கார் ஆகும்.
முதலில், டிரைவர் பக்கம் உள்ள பவர் விண்டோ (ஜன்னல்) ஸ்விட்ச்-சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 42,672 கார்கள் திரும்ப பெறபட்டது.
இரண்டாவதாக, கோளாறான ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களால், 2015-ஆம் ஆண்டில் 1,43,154 ஹோண்டா சிட்டி கார்கள் திரும்ப ரீகால் செய்யபட்டிருந்தது.


Click it and Unblock the Notifications








