டாப் 10 பட்டியலில் அதிரடியாக நுழைந்த ஹோண்டா ஜாஸ் கார்!

Written By:

பண்டிகை காலத்துக்கு முன்னதான ஜூலையில் சில கார் நிறுவனங்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்திருக்கின்றன. மேலும், புதிய கார் மாடல்களின் வரவும் டாப் 10 பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த துவங்கியிருக்கின்றன.

அப்படியும், சில கார் மாடல்கள் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பான விற்பனையுடன் தாக்கு பிடித்து வருகின்றன. அதுபோன்று, கடந்த மாத விற்பனையில் நடந்த கடும் போட்டிக்கு மத்தியில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹோண்டா அமேஸ்

10. ஹோண்டா அமேஸ்

காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஹோண்டா அமேஸ் கார் தொடர்ந்து ஓரளவு நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து ஹோண்டா கார் நிறுவனத்துக்கு கைகொடுத்து வருகிறது. கடந்த மாதம் 4,589 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யயப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4,507 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. எனவே, தொடர்ந்து சீரான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

09. ஹோண்டா சிட்டி

09. ஹோண்டா சிட்டி

கடந்த ஆண்டு ஜூலையில் 7,705 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம 5,180 ஹோண்டா சிட்டி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் சிட்டி கார் தொடர்ந்து நல்ல பங்களிப்பை வழங்கி வருவதுடன், மிட்சைஸ் செக்மென்ட் லீடர் என்ற பெருமையையும் தக்க வைத்து வருகிறது.

08. ஹோண்டா ஜாஸ்

08. ஹோண்டா ஜாஸ்

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் முதல் மாதத்திலேயே டாப் 10 பட்டியலுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது. கடந்த மாதம் 6,676 ஜாஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்திருக்கிறது.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

கடந்த மாதம் ஏழாவது இடத்தில் மாருதி செலிரியோ இடம்பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 7,784 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் மற்றும் சமீபத்தில் வந்த செலிரியோ டீசல் மாடல் ஆகியவை இந்த காரின் விற்பனையை சிறப்பான உயரத்தில் தக்க வைத்து வருகிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் ஆறாவது இடத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இடம்பிடித்திருக்கிறது. புதிய மாடலின் சிறப்பான டிசைன், வசதிகள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து சுண்டி இழுத்து வருகின்றன. கடந்த மாதம் 8,098 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு தோள் கொடுக்கும் மாடலாக தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் 5வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடலில் சரியான விலையில் கிடைக்கும் ஓர் சிறந்த ஹேட்ச்பேக் என்பதே இதன் பலம். கடந்த மாதம் 7,023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியுள்ளன.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

பட்டியலில் நான்காவது இடம் மாருதி வேகன் ஆர் காரினுடையது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு நான்காவது இடத்திற்கு ஆஸ்தான அதிபதி மாருதி வேகன் ஆர் என்று கூறுமளவுக்கு மிக ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் 15,540 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 11,762 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாதம் மாருதி ஸ்விஃப்ட் மூன்றாவது இடத்தை பிடித்தது. சிறந்த கையாளுமை, கவர்ச்சியான தோற்றம், அத்துடன் மைலேஜ் என்ற ஓர் சிறப்பான பேக்கேஜ் கொண்ட மாடல் என்பதால், ஆண்டுகள் உருண்டோடினாலும், விற்பனையில் சாதித்து வருகிறது. கடந்த மாதம் 18,870 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன.

02. மாருதி ஆல்ட்டோ

02. மாருதி ஆல்ட்டோ

இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பட்ஜெட் கார் பிராண்டு. கடந்த இரு மாதங்களாக தனது பங்காளியான டிசையரிடம் முதல் இடத்தை கோட்டை விட்டு, இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆனாலும், அல்ப, சல்பையான விற்பனையாக கூற முடியாது. கடந்த மாதம் 22,212 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆல்ட்டோவை குறிவைத்து இறக்கப்பட்ட பல மாடல்கள் மண்ணை கவ்வியதுதான் மிச்சம்.

01. மாருதி டிசையர்

01. மாருதி டிசையர்

டாப் 10 பட்டியலை எடுத்தவுடன் மாருதி டிசையரின் விற்பனை ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது. கடந்த மாதமும் முதலிடத்தை பிடித்தது. ஆனால், ஜூன் மாதத்தைவிட ஜூலையில் டிசையர் விற்பனை இன்னும் அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் 23,086 டிசையர் கார்கள் விற்பனையாகி டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. டிசையரின் மவுசு கூடிக் கொண்டே செல்வது பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் மாருதி டிசையர் கார் புதுப்பொலிவுடன், கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கு வந்ததும் இந்த காரின் விற்பனைக்கு கொஞ்சம் கூடுதல் வலு சேர்த்திருப்பதை காண முடிகிறது.

 
English summary
Car sales in July has seen a big change. A few new vehicles were launched and immediately entered the top 10 selling cars list. So, let's take a look at the top 10 selling cars in July 2015:
Story first published: Saturday, August 8, 2015, 14:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark