மே மாத விற்பனையில் டாப் 10 கார் மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு

By Saravana

கடந்த மாதமும், டாப் 10 பட்டியலில் மாருதி, ஹூண்டாய் கார் நிறுவனங்களின் மாடல்களின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஏப்ரல் டாப் 10 பட்டியலில் துண்டு போட்ட ஹோண்டா அமேஸ் கார் கடந்த மாத பட்டியலில் இருந்து கழன்று கொண்டது. அதன் இடத்தை ஹூண்டாய் எக்ஸென்ட் கார் பிடித்திருக்கிறது.

மற்றபடி, பட்டியலில் அதிக மாற்றங்கள் இல்லை. இருப்பினும், எந்தெந்த கார்கள் எவ்வளவு விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து, எந்த இடத்தில் உள்ளன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10 ஹூண்டாய் எக்ஸென்ட்

10 ஹூண்டாய் எக்ஸென்ட்

கடந்த மாதம் ஹோண்டா அமேஸை கீழே தள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறது ஹூண்டாய் எக்ஸென்ட். கடந்த மாதம் 4,871 எக்ஸென்ட் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.

09. ஹூண்டாய் இயான்

09. ஹூண்டாய் இயான்

அடுத்து ஒரு ஹூண்டாய் மாடல் டாப் 10 பட்டியலுக்குள் உள்ளது. அது ஹூண்டாய் இயான். கடந்த மாதம் 6,449 இயான் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

08. மாருதி செலிரியோ

08. மாருதி செலிரியோ

கடந்த மாதம் பட்டியலில் 8வது இடத்தை மாருதி பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 6,653 செலிரியோ கார்களை மாருதி விற்பனை செய்தது.

07. ஹோண்டா சிட்டி

07. ஹோண்டா சிட்டி

மிட்சைஸ் செக்மென்ட்டில் நம்பர்-1 ஆக இருந்து வரும் ஹோண்டா சிட்டி, டாப் 10 பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 7,562 சிட்டி கார்களை ஹோண்டா விற்பனை செய்தது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20

06. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் ஆறாவது இடத்தை ஹூண்டாய் எலைட் ஐ20 பிடித்தது. கடந்த மாதம் 8,469 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் கிராண்ட் ஐ10 கார் கடந்த மாத டாப் 10 பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 10,112 கிராண்ட் ஐ10 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

டாப் 10 பட்டியலில் 4வது இடத்தை மாருதி வேகன் ஆர் கார் பிடித்தது. கடந்த மாதம் 12,467 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த மாத பட்டியலில் 3வது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் உள்ளது. கடந்த மாதம் 17,195 ஸ்விஃப்ட் கார்களை மாருதி விற்பனை செய்தது.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

கடந்த மாதம் இரண்டாவது இடத்தை மாருதி டிசையர் மாடல் பெற்றது. கடந்த மாதம் 19,663 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது மாருதி ஆல்ட்டோ. கடந்த மாதம் 22,595 ஆல்ட்டோ கார்களை மாருதி கார் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 9, 2015, 10:48 [IST]
English summary
Looking at the brighter side, there have been new entrances as well. So now, let's take a look at top 10 selling cars in May 2015:
மேலும்... #டாப் 10 #top 10
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+