ஜூனில் டாப் 10 யுட்டிலிட்டி கார்கள்: அறிமுகத்துக்கு முன்பே பட்டியலில் நுழைந்த க்ரெட்டா

Written By:

எஸ்யூவி, எம்பிவி கார்கள் அடங்கிய யுட்டிலிட்டி கார் மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனவே, இப்போது குட்டி கார்களைவிட அதிக அளவிலான மாடல்கள் இந்த செக்மென்ட்டில் களமிறக்கப்பட்டு வருகின்றன. இதனால், போட்டி என்பது மிக கடுமையானதாகியுள்ளது.

கடந்த மாதம் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த யுட்டிலிட்டி கார்கள் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டாவும் இடம்பிடித்தது. அத்துடன், டாப் 10 பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

10. டொயோட்டா ஃபார்ச்சூனர்

10. டொயோட்டா ஃபார்ச்சூனர்

பட்டியலில் 10வது இடத்தில் இருந்தாலும், இதன் விலை ரகத்திலான மாடல்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது டொயோட்டா ஃபார்ச்சூனர். கடந்த மாதம் 1,390 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், விற்பனை 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மிரட்டலான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நம்பகத்தன்மையால் வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது.

09. ஹூண்டாய் க்ரெட்டா

09. ஹூண்டாய் க்ரெட்டா

விற்பனைக்கு வருவதற்கு முன்னரே பட்டியலில் ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 1,641 க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 15,000 முன்பதிவுகளை ஹூண்டாய் க்ரெட்டா பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, வரும் மாதங்களில் பட்டியலில் விஸ்வரூபம் எடுக்கும் என நம்பலாம். அசத்தலான டிசைன், வசதிகள் என எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க வந்ததிருக்கும் புதிய மாடல். அடுத்து வரும் மாதங்களில் கிடுகிடுவென பட்டியலில் மேலே செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

08. ரெனோ லாட்ஜி

08. ரெனோ லாட்ஜி

கடந்த மாதம் 1,708 ரெனோ லாட்ஜி எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காம்பேக்ட் எம்பிவி மார்க்கெட்டில் மிகச்சிறப்பான இடவசதி கொண்ட மாடல் என்பதே இதன் விற்பனை வெற்றிக்கு முக்கிய காரணம். டஸ்ட்டருக்கு அடுத்து ரெனோவின் வெற்றிகரமான மாடலாக உருவெடுத்திருக்கிறது லாட்ஜி.

 07. ரெனோ டஸ்ட்டர்

07. ரெனோ டஸ்ட்டர்

பல புதிய மாடல்கள் வந்தாலும் ரெனோ டஸ்ட்டருக்கான மவுசு தொடர்ந்து இருக்கிறது. கட்டுறுதியும், கம்பீரமும் மிக்க எஸ்யூவி மாடல் என்பதுடன், மிகச்சிறந்த எஞ்சின்களை பெற்றிருக்கிறது. அத்துடன் சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் தனக்கென தனி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 2,310 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும்போது 39.4 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

06. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

06. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

சாமுத்ரிகா லட்சணத்துடன் இந்திய தயாரிப்பில் உருவான எஸ்யூவி மாடல். கடந்த மாதம் 6வது இடத்தை பிடித்திருக்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி 500. கடந்த மாதம் 3,326 எக்ஸ்யூவி 500 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் இதன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு உறுதுணை புரிந்திருப்பது விற்பனை மூலம் தெரிய வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைவிட இப்போது விற்பனை 9.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

05. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

05. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

பிரிமியம் ஹேட்ச்பேக் விலையில் ஓர் சிறந்த எஸ்யூவி மாடலை வாங்கும் பாக்கியத்தை ஈக்கோஸ்போர்ட் மூலமாக ஃபோர்டு வழங்கியுள்ளது. டிசைன்தான் இதன் ப்ளஸ்பாயிண்ட். அத்துடன் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினும் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. எனவே, ஈக்கோஸ்போர்ட்டுக்கான ஆதரவு தொடர்ந்து நல்ல முறையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 3,664 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, விற்பனை 29.2 சதவீதம் குறைந்துவிட்டது. எனவே, புதுப்பொலிவு மாடலை களமிறக்க வேண்டிய காலம் வந்துவிட்டதை ஃபோர்டு உணர்ந்து செயல்பட்டால் இதன் இடத்தை தக்க வைக்கலாம்.

04. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

04. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

எஸ்யூவி மாடல்கள் மீது இந்தியர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தியதற்கு முக்கிய மாடல். கடந்த மாதம் 4வது இடத்தில் உள்ளது. முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மாதம் 3,666 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடும்போது, 4.7 சதவீதம் சரிந்துள்ளது.

03. டொயோட்டா இன்னோவா

03. டொயோட்டா இன்னோவா

எம்பிவி மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தில் டொயோட்டா இன்னோவா இருந்து வருகிறது. இடவசதி, வசதிகள், எஞ்சின் என அனைத்து விதத்திலும் இன்னோவாவிற்கு தனி இடம் பிடித்து தந்துள்ளது. கடந்த மாதம் 4,144 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் விற்பனையை ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 22.9 சதவீதம் குறைந்திருக்கிறது.

02. மாருதி எர்டிகா

02. மாருதி எர்டிகா

விலை, டிசைன், மைலேஜ், பராமரிப்பு செலவு, சர்வீஸ் நெட்வொர்க் என பல ப்ளஸ் பாயிண்ட்டகளை கொண்டு எம்பிவி மார்க்கெட்டில் கலக்கி வருகிறது மாருதி எர்டிகா. கடந்த மாதம் 5,395 எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது. மேலும், எம்பிவி மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 10.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

01. மஹிந்திரா பொலிரோ

01. மஹிந்திரா பொலிரோ

விற்பனையில் தொடர்ந்து வியப்பை ஏற்படுத்தி வரும் எஸ்யூவி மாடல். கடந்த மாதம் 6,093 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. புதிய மாடல் விரைவில் வர இருப்பதால் சற்று சுணக்கம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 22.9 சதவீதம் குறைந்திருக்கிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 selling utility vehicles in June 2015..
Story first published: Thursday, July 30, 2015, 13:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark