இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் டாப்-20 கார்கள்!

Written By:

இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறையின் மகத்தான ஆண்டாகவே கூறலாம். இதுவரை இல்லாத அளவுக்கு புதிய கார் மாடல்கள், சிறப்பு பதிப்பு மாடல்கள் என்பதுடன் விற்பனை வளர்ச்சியும் சீராக இருந்தது. மேலும், பல புதிய மாடல்களுடன் சில கார் நிறுவனங்கள் ஜாம்பவான் கார் நிறுவனங்களை ஆட்டிப் படைக்கத் துவங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது நிலவும் கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த மாடல்களின் விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். சியாம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் முதல் 20 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை காணலாம்.

ஜனவரி முதல் கார் விலை உயர இருப்பதால், ஆண்டு கடைசியில் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கும் இந்த பட்டியல் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

20. டாடா இண்டிகா/விஸ்டா

20. டாடா இண்டிகா/விஸ்டா

பட்டியலில் 20வது இடத்தை டாடா இண்டிகா/விஸ்டா பிராண்டு பிடித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மொத்தம் 30,444 டாடா இண்டிகா மற்றும் விஸ்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மொத்தம் 31,640 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்தநிலையில், சமீபத்தில் டாடா விஸ்டா கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, டாடா விஸ்டா காரை வாங்குவதை தவிர்ப்பது நலம். புதிய டாடா ஸீக்கா கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இண்டிகா காரை டாக்சி மார்க்கெட்டில் மட்டும் விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

19. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

19. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி 19வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 31,850 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 30,535 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இது 4.3 சதவீதம் கூடுதல். கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்த மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மூலமாக விற்பனை சற்று அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. கம்பீரமான ஓர் 7 சீட்டர் எஸ்யூவியை விரும்புவோர்க்கு சரியான விலையில் கிடைக்கும் மாடலாக குறிப்பிடலாம்.

 18. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

18. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

பட்டியலில் 18வது இடத்தை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிடித்துள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 37,305 ஃபோர்டு எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 43,861 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனையான நிலையில், போட்டி அதிகரித்ததன் காரணமாக, தற்போது விற்பனையில் தொய்வு காணப்படுகிறது. ஆனால், மாடர்ன் காம்பேக்ட் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கு ஓர் சிறந்த சாய்ஸ்.

17. ஹூண்டாய் எக்ஸென்ட்

17. ஹூண்டாய் எக்ஸென்ட்

பட்டியலில் 17வது இடத்தில் ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் கார் பிடித்திருக்கிறது. ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் 42,496 ஹூண்டாய் எக்ஸென்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 44,711 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பயர் வருகையும் இந்த காரின் விற்பனையில் சற்று மந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காம்பேக்ட் செடான் கார்களிலேயே சற்று பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல் என்பது இதன் பலம்.

16. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

16. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு 16வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 43,584 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 43,291 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டைவிட 0.7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. டிசைன், வசதிகள் என வாடிக்கையாளர்களை தொடர்ந்து சுண்டி இழுத்து வருகிறது ஸ்கார்ப்பியோ.

15. மாருதி எர்டிகா

15. மாருதி எர்டிகா

பட்டியலில் 15வது இடத்தில் மாருதி எர்டிகா காம்பேக்ட் எம்பிவி கார் உள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 48,575 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் 51,270 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பனையில் தொய்வு காணப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய மாடலுக்காக பலர் காத்திருந்ததால், விற்பனை குறைந்தது. மிகச்சரியான விலையில், போதிய வசதிகளுடன் கூடிய ஓர் சிறப்பான காம்பேக்ட் எம்பிவி கார் என்பதால் வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்பை பெற்றிருக்கிறது.

14. மாருதி ஈக்கோ

14. மாருதி ஈக்கோ

பட்டியலில் 14வது இடத்தில் மாருதி ஈக்கோ இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான முதல் பத்து மாதங்களில் 50,951 மாருதி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் 40,814 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பநை 24.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் எம்பிவி காரை வாங்குவோர்க்கு சிறந்த சாய்ஸாக உள்ளது.

13. டொயோட்டா இன்னோவா

13. டொயோட்டா இன்னோவா

பட்டியலில் 13வது இடத்தில் டொயோட்டா இன்னோவா உள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 52,624 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 49,278 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பனை சற்று அதிகரித்துள்ளது. ஓர் நிறைவான எம்பிவி காரை வாங்குவோர்க்கு இப்போது இன்னோவாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைதான் உள்ளது.

 12. ஹோண்டா அமேஸ்

12. ஹோண்டா அமேஸ்

பட்டியலில் 12வது இடத்தில் ஹோண்டா அமேஸ் கார் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி- அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் 56,792 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 57,377 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் ஆக்சென்ட் போன்ற போட்டியாளர்களால் இடையில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்தை ஹோண்டா அமேஸ் பெற்றிருக்கிறது.

11. ஹூண்டாய் இயான்

11. ஹூண்டாய் இயான்

பட்டியலில் 11வது இடத்தை ஹூண்டாய் இயான் கார் பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 58,103 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 67,773 இயான் கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது விற்பனை 14.2 சதவீதம் அளவுக்கு கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு ரெனோ க்விட் காரின் எஃபெக்ட்டும் ஒரு காரணமாக கூறலாம்.

10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

டாப்-10 பட்டியலுக்குள் மாருதி ஓம்னி இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. மிகச்சிறந்த பன்முக பயன்பாடு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் எளிதாக ஓட்டுவதற்கான வாகனமாகவும், அதிக நபர்களை ஏற்றிச்செல்லும் இடவசதியோடு மிகக் குறைவான விலை கொண்ட மினி வேன் என்பதால் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. தனிநபர் மார்க்கெட் மட்டுமின்றி, வர்த்தக மார்க்கெட்டிலும் ஓர் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 66,258 மாருதி ஓம்னி வேன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 61,032 ஓம்னி வேன்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பனை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

09. மாருதி செலிரியோ

09. மாருதி செலிரியோ

பட்டியலில் 9வது இடத்தை மாருதி செலிரியோ பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 67,986 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன.கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 57,839 செலிரியோ கார்கள் விற்பனையான நிலையில், தற்போது விற்பனை அதிகரித்திருக்கிறது. டீசல் மாடலிலும் விற்பனைக்கு வந்ததே முதன்மை காரணம். பட்ஜெட் விலையில் கார் வாங்குவோர்க்கு ஓர் சிறப்பான சாய்ஸ். பெட்ரோல், டீசல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளிட்ட ஆப்ஷன்கள் மூலமாக முன்னிலைப்படுத்திக் கொள்கிறது.

08. ஹோண்டா சிட்டி

08. ஹோண்டா சிட்டி

பட்டியலில் ஹோண்டா சிட்டி கார் 8வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மொத்தமாக 70,204 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு 64,065 கார்கள் விற்பனையாகிய நிலையில், தற்போது விற்பனை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசைன், வசதிகள், டீசல் மாடல் என்று வாடிக்கையாளர்களிடத்தில் தனி மதிப்பை பெற்றிருக்கிறது.

07. மஹிந்திரா பொலிரோ

07. மஹிந்திரா பொலிரோ

பட்டியலில் 7வது இடத்தில் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி உள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 74,039 மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 85,997 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பனை 13.9 சதவீதம் குறைந்துவிட்டது. அனைத்து சாலைகளுக்கும் உகந்த ஓர் சிறந்த பட்ஜெட் எஸ்யூவி மாடல் என்பதே இதன் வெற்றிக்கு காரணம்.

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

06. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

பட்டியலில் 6வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 98,407 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 80,935 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது விற்பனை 21.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் ஓர் சிறந்த பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல் என்பதே இதன் வெற்றிக்கு காரணமாக கூறலாம்.

05. ஹூண்டாய் ஐ20

05. ஹூண்டாய் ஐ20

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சக்கை போடு போட்டு வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 5வது இடத்தை பிடித்தது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் 1,09,631 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 49,219 எலைட் ஐ20 கார்களே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது விற்பனை 122.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரால் எலைட் ஐ20 காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் கார் தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 1,41,768 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,33,386 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது விற்பனை 6.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறைவான விலையில் சிறப்பான இடவசதி, குறைந்த பராமரிப்பு செலவீனம், மாருதியின் பெரிய அளவிலான சர்வீஸ் நெட்வொர்க் போன்றவை இந்த காரை முன்னிலைப்படுத்தி வருகிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்

03. மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கார் மாடல்களில் ஒன்று மாருதி ஸ்விஃப்ட் இந்த ஆண்டின் முதல் பத்து மாத விற்பனையின்படி, பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜனவரி- அக்டோபர் இடையிலாக காலக்கட்டத்தில் 1,80,517 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,67,521 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையான நிலையில், தற்போது 7.8 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வந்த மாருதி பலேனோ கார் ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் மாதங்களில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை மீட்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

ஆண்டுக்கு ஆண்டு மாருதி டிசையர் காம்பேக்ட் செடான் காரின் விற்பனை அதிகரித்து வருவது மாருதிக்கு உற்சாகத்தை தரும் விஷயம். கடந்த ஜனவரி- அக்டோபர் மாதங்களுக்கு இடையிலான காலக்கட்டத்தில் 2,00,422 டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,79,671 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு, இடவசதி என அனைத்திலும் நிறைவை தரும் கார் மாடல். அத்துடன் மாருதியின் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கச் செய்கிறது. ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில், நடுத்தர வர்க்கத்தினரின் செடான் கார் ஆசையை அனைத்து விதத்திலும் பூர்த்தி செய்யும் ஒரே மாடல் இதுதான் என்றால் மிகையில்லை.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடல் என்ற பெருமையை மாருதி ஆல்ட்டோ கார் தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 2,27,512 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,13,400 ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. விற்பனை சற்று கூடியிருந்தாலும், சமீபத்தில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் கார் மூலம் சற்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

 
English summary
Top 20 Best Selling Car Models In India.
Story first published: Friday, December 11, 2015, 12:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark