உலகின் அதிக மதிப்புமிக்க டாப் 5 கார் நிறுவனங்கள்!!

By Ravichandran

உலகின் அதிக மதிப்புமிக்க ஐந்து முன்னணி கார் நிறுவனங்களின் பட்டியலில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இடம்பெற்றிருக்கிறது.

எந்த ஒரு பொருளின் விற்பனைக்கும் அதன் பிராண்ட் மதிப்பு மிக அவசியமாக உள்ளது. பிராண்ட் மதிப்பு பொருத்தே அதன் விற்பனையும் வேறுபடுகிறது. ஆட்டோமோபைல்களின் விற்பனைக்கும் பிராண்ட் மதிப்பு மிக அவசியமான அம்சமாக கருதப்படுகிறது.

கடும் போட்டிகளுக்கு மத்தியில், ஒரு சில நிறுவனங்களுக்கே அதிக மதிப்பு கிடைத்துள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் சிறந்து விளங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு, கடின உழைப்பு, வாடிக்கையாளர்களின் திருப்தி, அதற்கு அப்பால் கடுமையான போட்டியில் சிறந்து விளங்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், முதலீட்டிற்கும், வருமானத்திற்குமான உயர்வு மதிப்பை வைத்து இந்த பிராண்டு மதிப்பை கணக்கிடுகின்றனர். அதில், எந்தெந்த கார் நிறுவனங்கள், எப்படி உலகின் தலைச்சிறந்த கார் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

5) ஃபோக்ஸ்வேகன்

5) ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனமானது, அதன் டீசல் கார்கள் மாசு உமிழ்வு சோதனைகளில் தேறுவதற்காக சில மென்பொருட்களை உபயோகப்படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்த நன்மதிப்பை கொஞ்சம் இழந்தது. இதுபோன்ற சில சர்ச்சைகளால் அதன் மதிப்பு 9 சதவிகித வீழ்ச்சி கண்டது. அப்படி இருந்தும், அந்நிறுவனம் உலகின் ஐந்து தலைச்சிறந்த கார் நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 12,545 அமெரிக்க டாலராகும்.

4) ஹோண்டா

4) ஹோண்டா

ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அந்த நிறுவனம் 6 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் தற்போதைய மதிப்பு, 22,975 அமெரிக்க டாலர்களாகும். ஹோண்டா சிவிக் அந்த நிறுவனத்தின் சிறந்தப்படியாக விற்பனையாகும் காராக விளங்குகிறது. கடந்த 34 ஆண்டுகளில் 16,500,000 கார்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3) மெர்சிடிஸ்-பென்ஸ்

3) மெர்சிடிஸ்-பென்ஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான இது, ஏழு சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. அதன் தற்போதைய மதிப்பு 36,711 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த சொகுசு கார் பிராண்டாக மெர்சிடிஸ்-பென்ஸ் இருந்து வந்தது. அந்த சிறப்பை இன்னும் தொடர்ந்து வருகின்றது. ஆடி கார் நிறுவனத்தை வீழ்த்திய மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடியை சிறந்த ஐந்து கார் பிராண்ட்களின் பட்டியலில் இருக்க விடாமல் செய்துள்ளது. தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் மெர்சிடிஸ்-பென்ஸ், விரைவில் இந்தியாவின் முன்னனி சொகுசு காராக மாறும் வாய்ப்பும் உள்ளது.

2) பி எம் டபுள்யூ

2) பி எம் டபுள்யூ

பிஎம்டபுள்யூ கார் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பி எம் டபுள்யூ 9 சதவிகித வளர்ச்சி கண்டு, அதன் சக நாட்டு ஜெர்மானிய கார் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ்-ஸை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்து, பி எம் டபுள்யூ-வும் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. பி எம் டபுள்யூ கார் பிராண்டின் தற்போதைய மதிப்பு 37,212 அமெரிக்க டாலர்களாகும்.

 1) டொயோட்டா

1) டொயோட்டா

தலைச்சிறந்த கார் பிராண்ட்களின் பட்டியலில் ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனமானது, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் இருந்து கடும் போட்டியை சந்திக்க நேர்ந்தது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் டீசல் இஞ்ஜின் மாசு உமிழ்வு சோதனையில் தேருவதற்காக செய்த மென்பொருள் தில்லுமுல்லானது, டொயோட்டா-விற்கு பலத்த நன்மையாக மாறியது. இதனால், டொயோட்டா கடந்த ஆண்டில் மட்டும் 16 சதவிகிதம் வரையிலான அபார வளர்ச்சியை எட்ட முடிந்தது. டொயோட்டாவின் தற்போதைய மதிப்பு 49,048 அமெரிக்க டாலர்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.

Most Read Articles
English summary
Here is a look at top five most valued car brands in the world.
Story first published: Sunday, October 11, 2015, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X