ஏற்றுமதியில் அசத்தும் 'பேக் பெஞ்சர்ஸ்'... டாப் - 7 கார் நிறுவனங்களின் பட்டியல்

By Saravana

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான, நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் கார் விற்பனை ஜோராக இருந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் பல புதிய மாடல்களை களமிறக்கி, அதற்குண்டான பலனையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது, கார் ஏற்றுமதியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நம் நாட்டிலிருந்து கார் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியல் சிறிது சுவாரஸ்யமானது. ஆம், உள்நாட்டு விற்பனையில் மிகவும் பின்தங்கி இருக்கும் கார் நிறுவனங்கள் ஏற்றுமதியில் முதன்மையாக திகழ்கின்றன. மேலும், அந்த நிறுவனங்களின் உள்நாட்டு கார் விற்பனை போதிய அளவு இல்லையென்றாலும், ஏற்றுமதியை வைத்து சமாளிப்பது இந்த புள்ளிவிபரங்கள் மூலமாக உங்களுக்கு புலனாகும்.

07. ஜெனரல் மோட்டார்ஸ்

07. ஜெனரல் மோட்டார்ஸ்

இந்திய கார் மார்க்கெட்டில் விற்பனையில் மிகவும் பின்தங்கிய நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் 7வது இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3,180 கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இதில், 3,000 கார் செவர்லே பீட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.

06. டொயோட்டா

06. டொயோட்டா

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 8,962 கார்களை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதியை அதிகரிக்கவும் டொயோட்டா திட்டமிட்டு செயல்திட்டங்களை வகுத்துள்ளது.

 05. ஃபோர்டு

05. ஃபோர்டு

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு, நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 15,142 கார்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இது அந்த நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்திற்கும், வருவாய்க்கும் கூடுதல் உதவி புரிந்து வருகிறது. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்து வருகிறது.

04. ஃபோக்ஸ்வேகன்

04. ஃபோக்ஸ்வேகன்

இந்தியாவில் பெரும் தடுமாற்றத்தில் இருந்தாலும், ஏற்றுமதி மூலமாக ஓரளவு வர்த்தகத்தை சீராக்கிக் வைத்திருக்கிறது ஜெர்மானிய நிறுவனமான ஃபோக்ஸ்வேகன். நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 36,145 கார்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கிறது. டீசல் கார்களில் மாசு அளவு மோசடி தொடர்பாக எழுந்திருக்கும் சிக்கலையடுத்து, அந்த நிறுவனத்தின் எதிர்கால விற்பனையில் சுணக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

03. நிசான்

03. நிசான்

ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் இந்திய மார்க்கெட்டில் மிக மோசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான ரெனோ கார் நிறுவனம் கூட, புதிய கார் மாடல்களை துடிப்புடன் அறிமுகப்படுத்தி, சீரான வளர்ச்சியை நோக்கி செல்கிறது. ஆனால், நிசான் வசம் விற்பனையில் சொல்லிக்கொள்ளும் படி ஒரு மாடல் கூட கைவசம் இல்லை என்பது துரதிருஷ்டவசம். ஆனால், ஏற்றுமதி மூலமாக இந்திய வர்த்தகத்தை செம்மையாக்கிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 53,704 கார்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

02. மாருதி சுஸுகி

02. மாருதி சுஸுகி

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி, நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 57,552 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. மாருதியின் உள்நாட்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி அவ்வளவு சிறப்பாக கூற முடியாது. இருப்பினும், விற்பனையில் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் அதன் தாய் நிறுவனமான சுஸுகி வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதால், மாருதிக்கு ஏற்றுமதியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

 01. ஹூண்டாய் மோட்டார்ஸ்

01. ஹூண்டாய் மோட்டார்ஸ்

இந்தியாவின் கார் ஏற்றுமதியில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்தான் நீண்ட காலமாக நம்பர்- 1 இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 97,021 கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Here's a list of top 7 cars that have been exported during the first half of the 2016 financial year:
Story first published: Thursday, October 29, 2015, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X