புதிய வியோஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு

By Ravichandran

டொயோட்டா நிறுவனம் தங்களின் வியோஸ் ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் முனைப்புடன் உள்ளது.

மிட்-சைஸ் செடான் எனப்படும் நடு-ரக கார்கள் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி முன்னணியில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்த ரகத்திலான வானகங்களின் சந்தை 16 சதவிகிதம் (அதாவது 89,669 கார்கள்) என்ற அளவுக்கு அதிகரித்தது.

இந்த மிட்-சைஸ் செடான்கள் சந்தையில் போட்டிப்போடுவதற்காக, டொயோட்டா நிறுவனம் தங்களின் வியோஸ் ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

வியோஸ் காருக்கு அங்கிகாரம்;

வியோஸ் காருக்கு அங்கிகாரம்;

டொயோட்டாவின் வியோஸ் காரானது, 2015 ஃபிராஸ்ட் அண்ட் சுல்லிவன் மலேசியா எக்சலன்ஸ் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த காருக்கான ‘கார் ஆஃப் தி இயர்' என்ற அங்கிகாரத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடும் போட்டி;

கடும் போட்டி;

மிட்-சைஸ் செடான்கள் கார் ரகத்தில், புதிய வியோஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதன் மூலம், ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க முடியும் என டொயோட்டா நிறுவனம் நினைக்கிறது.

இந்தியாவில் வியோஸ் காருக்கான எஞ்ஜின்;

இந்தியாவில் வியோஸ் காருக்கான எஞ்ஜின்;

இந்திய சந்தையை பொருத்த வரை, டொயோட்டா கொரோல்லாவிற்கு 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜினும், எட்டியோஸ் செடான் காருக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் வியோஸ் ரக காருக்காக 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் உருவாக்கும் பணியில் டொயோட்டா

நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மலேசியாவில் வியோஸ் காருக்கான எஞ்ஜின்;

மலேசியாவில் வியோஸ் காருக்கான எஞ்ஜின்;

மலேசியாவில் விற்கப்படும் வியோஸ் காரில் 1.5 லிட்டர் விவிடி-ஐ பெட்ரோல் இஞ்ஜின் உள்ளது. அது 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

டொயோட்டா மலேசியா விருப்ப அடிப்படையில், ஈ.சி.டி. எனப்படும் 4-ஸ்பீட் அட்டோமேட்டிக் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் ட்ரான்ஸ்மிஷனையும் வழங்குகிறது.

இந்தியாவில் அறிமுக கட்டத்தில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களை வழங்க முடிவு செய்துள்ள டொயோட்டா, பின் வரும் காலங்களில், இந்தியாவிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டை வழங்கம் முடிவு செய்துள்ளது.

எட்டியோஸ் காருக்கு மாற்றாக வியோஸ்;

எட்டியோஸ் காருக்கு மாற்றாக வியோஸ்;

இந்தியாவிற்கான பிரத்யேக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வியோஸ் ரக கார்கள் இந்தியாவிற்கு ஏற்றவாறு உள்ளூர்மயமாக்கல் செய்யப்பட உள்ளது.

செடான் வகையில் எட்டியோஸ் ரக கார்களையும், ஹேட்ச்பேக் வகையில் எட்டியோஸ் ரக கார்களை டொயோட்டா நிறுவனம் வழன்ஹ்கி வருகிறது. நெடுநோக்கில், வியோஸ் கார்கள், எட்டியோஸ் காருக்கு மாற்றாக அமைந்து விடும் என தெரிகிறது.

வியோஸ் காருக்கான விலை விபரம்;

வியோஸ் காருக்கான விலை விபரம்;

மலேசியாவில், வியோஸ் காரின் விலை 75,000 மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் 13 லட்ச ரூபாய்) விலையில் விற்கப்படுகிறது.

எனினும், வியோஸ் இந்தியாவிலேயே அதிக அளவிற்கு உள்ளூர்மயமாக்கல் செய்யப்பட உள்ளதால் அதன் விலை ஏழு லட்சம் (அடிப்படை வேரியண்ட்) முதல் 11 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

இந்தியாவில் அறிமுக தேதி;

இந்தியாவில் அறிமுக தேதி;

டொயோட்டாவின் புதிய வியோஸ், தற்போது டொயோட்டா மோட்டர் ஏஷியா பெசிஃபிக் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது இந்தியாவில், 2018 ஜனவரி காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 19, 2015, 17:41 [IST]
English summary
Toyota plans to Introduce All-New Vios. This is done to manage competition from Rival Honda City And Hyundai Verna. The Toyota Vios was awarded the Car of the Year title at the 2015 Frost and Sullivan Malaysia Excellence Awards recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+