‘ரிமம்பர் டிசம்பர்’ ஆஃபர்... டொயோட்டாவின் டிசம்பர் ஆஃபர் விபரம்!
ஆண்டு கடைசியில் விற்பனையை ஊக்கும்விக்கும் விதத்தில், டொயோட்டா நிறுவனம், 'ரிமம்பர் டிசம்பர்' என்ற பெயரில், சிறப்புச் சலுகைகளை வாரி வழங்குகிறது.
வருடம் நிறைவ்டைவதை ஒட்டி, கடந்த சில தினங்களாக, கார் நிறுவனங்கள், ஒன்றன்பின் ஒன்றாக சலுகைகளை அறிவித்து கொண்டே இருக்கின்றன.
டொயோட்டா நிறுவனம் வழங்கும் சலுகைகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

‘ரிமம்பர் டிசம்பர்’ பற்றி...
ஒவ்வொரு நிறுவனமும், இந்த டிசம்பர் மாதத்தின் போது, மாறி மாறி சலுகைகளை அறிவித்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில், டொயோட்டா நிறுவனமும், தங்கள் பங்கிற்கு ‘ரிமம்பர் டிசம்பர்' என்ற பெயரில் சலுகைகளை வழங்குகின்றனர்.
‘ரிமம்பர் டிசம்பர்' சலுகைகளின் கீழ் 6 மாடல்கள் சேர்க்கபட்டுள்ளன.

சலுகைகள் கிடைக்கும் காலம்;
இந்த ‘ரிமம்பர் டிசம்பர்' ஆஃபரில் வழங்கபடும் சலுகைகள் டிசம்பர் 31, 2015-ஆம் தேதி அன்றோ அதற்கு முன்பு முன்பதிவு செய்து வாங்கப்படும் கார்களுக்கு மட்டுமே கிடைக்க உள்ளது.

சலுகைகள் கிடைக்கும் பகுதிகள்;
இந்த ‘ரிமம்பர் டிசம்பர்' சலுகைகள் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே கிடைக்க உள்ளது.
‘ரிமம்பர் டிசம்பர்' சலுகைகள், டெல்லி என்சிஆர், குர்கான், ஹர்யானா, பஞ்ஜாப், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, தமிழ் நாடு, மும்பை, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கோவா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 15 பகுதிகளில் மட்டுமே கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வேறு வேறு ஆஃபர்கள்;
ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஒவ்வொரு மாதிரியான ஆஃபர்கள் வழங்கபடுகிறது. தமிழ் நாட்டில் எந்த வகையான சலுகைகள் வழங்கபடுகிறது என்று தெரிந்து கொள்வோம்.
டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் மீது, அதிகபடியாக 40,000 ரூபாய் வரையிலான சலுகைகள் அல்லது ஃபைனான்ஸ் தேர்வுகள், 4.99 % வட்டி விகிதத்தில் வழங்கபடுகிறது.
எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் கிராஸ் மீது 50,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கபடுகிறது.

இதர கார்களுக்கான சலுகைகள்;
டொயோட்டா எட்டியோஸ் லிவா சமீபத்தில் மேம்படுத்தபட்டு இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டது. இந்த ஹேட்ச்பேக் காரின் மீது 50,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.
டொயோட்டா இன்னோவா மாடல் மீது, 50,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் அல்லது ஃபைனான்ஸ் தேர்வுகள் தேர்வு முறையிலான 7.99 சதவிகிதம் என்ற குறைந்த வட்டியில் வழங்கபடுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்?
டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலும் இந்த ‘ரிமம்பர் டிசம்பர்' ஆஃபரில் சேர்க்கபட்டுள்ளது. ஆனால், இந்த பிரிமியம் எஸ்யூவி மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகள் மட்டுமே வழங்கபடுகிறது.
மேலும், சில குறிப்பிட்ட வேரியண்ட்களின் மீது மட்டுமே இந்த சலுகைகள் வழங்கபடுகிறது. இந்த சலுகைகளில் கிடைக்கும் கார்களின் ஸ்டாக்குகள் குறைந்த அளவில் மட்டுமே உள்ளது.

எப்படி கார்களை புக்கிங் செய்யலாம்?
டொயோட்டா நிறுவனம் சார்பாக வழங்கபடும் கார்களை ஆன்லைனிலும் புக்கிங் செய்யலாம்.
உங்களுக்கு பிடித்த டொயோட்டா நிறுவன தயாரிப்பை புக்கிங் செய்ய,
இங்கே கிளிக் செய்யவும்

இதர தொடர்புடைய செய்திகள்;
ரெனோ நிறுவனம் வழங்கும் 'டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' - டிஸ்கவுண்ட்டுகள், ஆஃபர்கள் மழை துவங்கியது
செவர்லே வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள் - விபரம்!
ஹூண்டாய் நிறுவனத்தின் டிசம்பர் டிலைட் கொண்டாட்ட சலுகைகள்

செய்திகள் உடனுக்குடன்
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க


Click it and Unblock the Notifications