டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் க்ரூஸர் இந்தியாவில் அறிமுகம்
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புதிய லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல் காரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கின்றது. அதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இஞ்ஜின்;
புதிய லேண்ட் க்ரூஸர் அதே 4.5 லிட்டர் வி8 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 281 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 647 டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பிற அம்சங்கள்;
புதிய லேண்ட் க்ரூஸர் காரில், ஹீட்டருடன் கூடிய ஸ்டியரிங் வீல், எல்.ஈ.டி இல்லுமினேட்டட் எண்ட்ரி சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட பலத்ரபட்ட நிலப்பரப்பு கண்காணிப்பு கேமராக்கள்) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
மேலும், டிஎஃப்டி இன்ஃபோ டிஸ்ப்ளேயுடன் கூடிய, 4.2 இஞ்ச் அளவிலான பெரிய எலக்ட்ரோ மல்டி-விஷன் ஆடியோ, சேட்டின் சில்வரால் ஆன சென்டர் கன்ஸோல், புதிய இண்டீரியர் கலர்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

எக்ஸ்டீரியர்;
புதிய லேண்ட் க்ரூஸர் காரின் எக்ஸ்டீரியரில் புதிய ஹெக்ஸாகனல் கிரில், எல்ஈடி ஹெட்லேம்ப்கள், புதிய அல்லாய் வீல்கள், மறுவடிவமைக்கபட்ட ரியர் காம்பினேஷன் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

கலர்கள்;
தற்போது, புதிய லேண்ட் க்ரூஸர் சூப்பர் வைட், வைட் பெர்ல் கிரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், கிரே மெட்டாலிக், பிளாக், ஆட்டிட்யூட் பிளாக், டார்க் ரெட் மைகா மெட்டாலிக், பீஃஜ் மைகா மெட்டாலிக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கின்றது.
இதோடு மட்டுமல்லாமல், எக்ஸ்டீரியர்களில், காப்பர் பிரௌன் மற்றும் டார்க் புளூ மைகா நிறத்தில் கிடைக்கின்றது. இதே போல், இண்டீரியரிலும், தற்போது கிடைக்கும் பிளாக் அல்லாது, பிரௌன் மற்றும் ஃபிளாக்ஸன் உள்ளிட்ட அமைப்பில் கிடைக்கின்றது.

விலை;
டொயோட்டாவின் புதிய லேண்ட் க்ரூஸர் இந்தியாவில், 1.29 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








