அசத்தலான இரட்டை வண்ணக் கலவையில் டொயோட்டா லிவா கார் அறிமுகம்!

By Ravichandran

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டர்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்தையொட்டி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோட்டாவின் உயர் அதிகாரியான அகிடோஷி டகிமுரா புதிய எட்டியோஸ் லிவா காரின் அறிமுகத்தை ஒட்டி மிகுந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு தொடர்ந்து உயர்தர வாகனங்களை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். மேலும், இந்திய மக்களின் மாறிவரும் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றவாறு, எங்களின் வாகனங்களின் பொலிவை கூட்டி கொண்டே இருப்போம் என அவர் தெரிவித்தார்.

புதிய லிவாவின் புதிய அம்சங்கள்;

புதிய லிவாவின் புதிய அம்சங்கள்;

இரட்டை வண்ணத்தில் புதிய லிவா கார் வந்துள்ளது.

லிவாவின் முன்பக்க க்ரில், சைடு மிரர்கள், கூரை மற்றும் ஸ்பாய்லர் ஆகியவை கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய லிவாவில் 15-இஞ்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் உள்ளது.

புதிய லிவா கிடைக்கும் நிறங்கள்;

புதிய லிவா கிடைக்கும் நிறங்கள்;

எட்டியோஸ் லிவா ட்யூவல் டோன் எனப்படும் இரட்டை வெளிப்புற வண்ணக் கலவைகளில் வந்துள்ளது.

மேலும், கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு-சாம்பல் ஆகிய இரண்டு விதமான வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய லிவாவின் பாதுகாப்பு அம்சங்கள்;

புதிய லிவாவின் பாதுகாப்பு அம்சங்கள்;

புதிய லிவாவில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இதில் முன்புறத்திற்கான டியூவல் எஸ்.ஆர்.எஸ் ஏர்பேக்குள், விபத்து நேரத்தில் ஆபத்து நேராமல் இருக்க ஓட்டுனர் மற்றும் பயணியை, இறுக பிடித்து பாதுகாக்க உதவும் ப்ரீ-டென்ஷனர் மற்றும் போர்ஸ் லிமிட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய முன்பக்க இருக்கைகளுக்கான சீட்பெல்ட்களுடன் கிடைக்கிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இந்த புதிய எட்டியோஸ் லிவாவில், புதிய ட்யூவல் டோன் சீட் ஃபேப்ரிக்ஸ், வுட்ஃபினிஷ் டேஷ்போர்ட் மற்றும் நவீன ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் உள்ளது.

இது போன்ற கூடுதல் அம்சங்கள் கொண்ட உட்புற அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான சந்தோஷத்தை வழங்கும்.

விலை;

விலை;

எட்டியோஸ் லிவா ட்யூவல் டோன் காரின் பெட்ரோல் மாடல் 5,76,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கும்.

இதன் டீசல் வேரியண்ட் 6,79,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கும். இந்த புதிய கார் உடனடியாக விற்பனைக்கு வருகின்றது.

வாரண்டி;

வாரண்டி;

டொயோட்டா இந்தியா நிறுவனம், எட்டியோஸ் லிவா ட்யூவல் டோன் காருக்கு 1 லட்சம் கிலோமீட்டர் அல்லது மூன்று வருடங்களுக்கான வாரண்டியை வழங்குகிறது.

இதர கார்கள்;

இதர கார்கள்;

டொயோட்டா நிறுவனம் சார்பாக எட்டியோஸ் லிவா, எட்டியோஸ் கிராஸ், கொரோல்லா ஆல்டிஸ், கேம்ரி, ப்ரியஸ், இன்னோவா, ஃபார்ச்யூனர், எல்சி ப்ராடோ, எல்சி 200 உள்ளிட்ட கார்கள் கிடைக்கின்றது.

அடுத்த ஆண்டிற்குள், டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்யூனர் மற்றும் இன்னோவா ரக கார்களை மேம்படுத்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 17, 2015, 12:45 [IST]
English summary
Toyota New Liva Launches In Dual Tone For This Festive Season. This new edition of Liva comes with more safety features and attractive offers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+