6.5 மில்லியன் கார்களை திரும்ப அழைக்கிறது டொயோட்டா

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, 6.5 மில்லியன் கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப குறைபாடு கொண்ட பவர் விண்டோஸ் பொருத்தப்பட்ட கார்களில் ஆய்வு செய்வதற்காக, இப்படி அதிக அளவிலான கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

டொயோட்டா கரொல்லா மற்றும் கேம்ரி ஆகிய கார்களில் இந்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2005 ஜனவரி முதல் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் ஆகிய கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட கார்கள் உள்ளன.

பவர் விண்டோஸ் சுவிட்சுகள் உபயோகத்தின் போது, மின் கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், ஸ்விட்சுகள் அளவுக்கு மேல் சூடாகி, வாகனம் தீப்பற்றக்கூடிய வாய்ப்புகள் கூட உள்ளது.

Toyota To Recall 6.5 Million Vehicles Globally Over Faulty Switch

இந்த குறைபாடு குறித்தோ அல்லது இதனால் நிகழ்ந்த விபத்துகள் குறித்தோ டொயோட்டாவிற்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, திரும்ப அழைக்கப்படும் மொத்த டொயோட்டா கார்களில், 2.7 மில்லியன் கார்கள் வட அமெரிக்காவிலும், 1.2 மில்லியன் கார்கள் ஐரோப்பாவிலும், சுமார் 600,000 ஜப்பானிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொயோட்டா மேட்ரிக்ஸ், ஆர்ஏவி 4, ஹைலாண்டர், டுந்தரா மற்றும் ஸ்சியான் எக்ஸ்.பி மாடல் கார்களும் திரும்ப பெறப்பட உள்ளன.

முன்னதாக, ஜப்பானில் விற்பனையாகிய கிரவுன் மற்றும் கிரவுன் மெஜஸ்டா மாடல் கார்களில் 140,000 கார்கள் டொயோட்டாவால் திரும்ப பெறப்பட்டன. இவை தவறான பானட் ரிலீஸ் ஸ்விச்கள் பிரச்னையால் திரும்ப பெறப்பட்டது. இத்தகைய ஸ்விச்களால், பானட் திறந்து கொள்ளும் அபாயம் இருந்தது.

மேலும், தகட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குறைபாடுடைய ஏர்பேக்குகள், விபத்து நேரங்களில் பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்து விலைவிக்கும் வகையில் இருந்தன. இந்த பிரச்னை எழும் போதும், டொயோட்டா நிறுவனம் ஏராளமான கார்களை திரும்ப பெற நேர்ந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 22, 2015, 8:37 [IST]
English summary
Toyota To Recall 6.5 Million Vehicles Globally Over Faulty Switch. The recall includes the Corolla and Camry model cars as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+