இந்தியாவில் டொயோட்டா வயோஸ் சோதனை... ஹோண்டா சிட்டிக்கு தலைவலி!

By Saravana

ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக வயோஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டிருப்பது குறித்து கடந்த ஆண்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. ஆம். இந்தியாவில் தற்போது வயோஸ் காரின் சோதனை ஓட்டங்களை டொயோட்டா கார் நிறுவனம் துவங்கியிருக்கிறது.

பெங்களூர் அருகே இந்த கார் சமீபத்தில் சாலை ஓட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கார் ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களையும், சில படங்களும் உங்கள் பார்வைக்காக...


சிறப்பான டிசைன்

சிறப்பான டிசைன்

போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மிகச்சிறப்பான டிசைன் கொண்ட மாடலாக வர இருக்கிறது. மேலும், பெங்களூரில் உள்ள ஆலையில் இந்த புதிய காரை அசெம்பிள் செய்து விற்க டொயோட்டா முடிவு செய்திருக்கிறது. இதனால், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. 67.04 எச்பி பவரையும், 170என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 107.4 எச்பி பவரையும், 141 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது முதல்கட்ட கணிப்பாக இருக்கிறது. இந்த விலையில் வரும்போது ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்களுக்கு நிச்சயம் நெருக்கடியை தரும்.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய செடான் காரை இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டிருக்கிறது.

எட்டியோஸுக்கு கல்தா

எட்டியோஸுக்கு கல்தா

தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யபப்பட்டு வரும் டொயோட்டா எட்டியோஸ் காருக்கு மேலான ரகத்தில் இந்த கார் நிலைநிறுத்தப்படும்.

வயோஸ் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டுகள்

வயோஸ் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டுகள்

தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த கார் தற்போது விற்பனையில் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 14, 2015, 12:08 [IST]
English summary
Toyota is expected to launch its Vios sedan in India by 2015-end or early 2016. The Japanese manufacturer will price its vehicle competitively and is expected to heavily localise assembly. We believe this sedan will be priced between INR 7,00,000 to INR 10,00,000 ex-showroom.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+