லிமோசின் ரகத்தில் மாற்றப்பட்ட 2 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் பறிமுதல்!

Written By:

மும்பையில், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி லிமோசின் ரகத்தில் மாற்றப்பட்ட இரண்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குஜராத் பதிவு எண்கள் கொண்ட இந்த லிமோசின் கார்கள் மும்பையில் வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளன. இதனையடுத்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இரண்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளும் விதிகளை மீறி நீட்டிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டது தெரிய வந்தது.

குஜராத் நிறுவனம்

குஜராத் நிறுவனம்

குஜராத் மாநிலம், அனந்த் பகுதியை சேர்ந்த NWT இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த லிமோசின் கார்கள் மும்பையில் வைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் விதத்தில் வாடகைக்கு விட்டுள்ளனர்.

மணி வாடகைக்கு...

மணி வாடகைக்கு...

மும்பையிலுள்ள, வஷி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இரண்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளும் மணிக்கு ரூ.10,000 வாடகை என்ற அடிப்படையில் இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

கூடுதல் நீளம்

கூடுதல் நீளம்

கடந்த 2011ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளும் 1.6 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

செலவு

செலவு

ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழித்து இந்த ஸ்கார்ப்பியோவில் மாற்றங்களை செய்துள்ளதாக ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.

வசதிகள்

வசதிகள்

இந்த இரண்டு ஸ்கார்ப்பியோ லிமோசின் எஸ்யூவிகளிலும் பார் வசதி, 31 இன்ச் டிவி, எல்இடி விளக்குகள், சொகுசான இருக்கைகள் கொண்டதாக இருக்கின்றன.

 டிரைவர் வாக்குமூலம்

டிரைவர் வாக்குமூலம்

பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கார்ப்பியோ லிமோசின் கார்களின் ஓட்டுனர்கள், இதுபோன்ற குஜராத்தில் அதிக லிமோசின் கார்கள் வாடகைக்கு ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 ஆவணங்கள்

ஆவணங்கள்

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லிமோசின் கார்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

உடைக்கப்படும்?

உடைக்கப்படும்?

முறையான ஆவணங்களை உரிமையாளர் சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில், இந்த இரு கார்களும் உடைக்கப்படும் என்றும் ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Images Source 

English summary
Two models of the Mahindra Scorpio that were illegally modified to the length of a limousine were seized by the flying squad of the Vashi RTO.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark