பண்டிகை காலத்தில் ரிலீசாகும் புதிய கார் மாடல்கள் - ஒரு பார்வை

Written By:

பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான அதிகபட்ச விற்பனையை பதிவு செய்வதற்காக கார் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. மேலும், புத்தம் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளையும், வியாபார வியூகங்களுடன் தயாராகிவிட்டன.

இந்தநிலையில், புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில், அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்களின் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

 01. ஃபோர்டு ஆஸ்பயர்

01. ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து வரும் புத்தம் புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலான ஃபோர்டு ஆஸ்பயர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பெரும்பாலான விபரங்கள் வெளியாகிவிட்ட நிலையில், விலைப்பட்டியல் இன்று முறைப்படி வெளியிடப்படுகிறது. டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியிலிருந்து, தகவல்களை நேரடியாக பகிர்ந்துகொள்வதற்கு எமது செய்தியாளர் தயாராக இருக்கிறார்.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. அதாவது, இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் கொண்ட ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வர இருக்கிறது. சிறப்பான பாதுகாப்பு வசதிகள், இடவசதியுடன் கூடிய ஒரு புதிய செடான் மாடலாக வருவதால் வாடிக்கையாளர்களிடத்தும் எதிர்பார்ப்பு அதிகமிருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு அடுத்து, அதிக எதிர்பார்ப்புக்கு இடமாகியிருக்கும் மாடலாக கருதப்படுகிறது.

02. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

02. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

அடுத்த மாதம் 2ந் தேதி புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய எஸ்யூவியை லேண்ட்ரோவர் நிறுவனம் நிலைநிறுத்துகிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

தற்போதைய ஃப்ரீலேண்டர்-2 எஸ்யூவியை விட இந்த புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி அளவில் சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 5+2 என்ற இருக்கை கொண்ட மாடலிலும் வாங்க முடியும். இந்த புதிய சொகுசு எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸபீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. லேண்ட்ரோவரின் விலை குறைவான மாடலாக வருகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜேஎல்ஆர் ஆலையில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.

 03. மஹிந்திரா டியூவி300

03. மஹிந்திரா டியூவி300

ஹோண்டா கார் நிறுவனத்தால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மஹிந்திரா நிறுவனம், புதிய மாடல்களை களமிறக்கி தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அடுத்த மாதம் ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை மஹிந்திரா களமிறக்குகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் டீசரை வெளியிட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் கூட வெளியானது.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருக்கும் நெருக்கடியில் இந்த புதிய எஸ்யூவியை ரூ.6 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

04. மாருதி பலெனோ

04. மாருதி பலெனோ

ரூ.10 லட்சம் வரையிலான மார்க்கெட்டில் இருக்கும் காலி இடங்களை நிரப்பும் முயற்சிகளில் மாருதி ஈடுபட்டுள்ளது. அதற்காக, சமீபத்தில் எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் வகை மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது பலெனோ என்ற பெயரில் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

 கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்த மாதம் 15ந் தேதி பிராங்க்பர்ட் மோட்டார்ஷோவில் இந்த புதிய கார் மாடலை சுஸுகி வெளியிட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, பண்டிகை காலத்தில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர்த்து, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்சினும் எதிர்பார்க்கப்படுகிறது.

05. ஃபியட் புன்ட்டோ அபார்த்

05. ஃபியட் புன்ட்டோ அபார்த்

சாதாரண கார்களின் அதிசக்திவாய்ந்த மாடல்களை அபார்த் பிராண்டில் ஃபியட் விற்பனை செய்கிறது. சமீபத்தில் தனது அபார்த் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபியட். முதல் மாடலாக ஃபியட் அபார்த் 595 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் வர இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அதிக சக்திவாய்ந்த மாடலாக வருகிறது.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

புதிய ஃபியட் புன்ட்டோ அபார்த் காரில் 145 பிஎச்பி பவரையும், 207 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. அதிசக்திவாய்ந்த எஞ்சின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டிருக்கும். ரூ.10 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06. ஃபோர்டு எண்டெவர்

06. ஃபோர்டு எண்டெவர்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் பிரிமியம் எஸ்யூவி மாடல். பண்டிகை காலத்தில் இந்த புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் புதிய டிசைனிலும், ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளையும் தாங்கி வருகிறது.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

இரண்டுவிதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களிலும் தேர்வு செய்யும் வாய்ப்பை ஃபோர்டு வழங்கும். தாய்லாந்திலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையிலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேரடி போட்டியை கொடுக்கும். ரூ.22 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரையிலான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07. செவர்லே ட்ரையல்பிளேசர்

07. செவர்லே ட்ரையல்பிளேசர்

சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தீவிர சோதனைகளில் இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலை பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதது.

 கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவியில் 2.8 லிட்டர் டியூராமேக்ஸ் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 500என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த எஸ்யூவிக்கு 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுப்பது பற்றியும் ஜெனரல் மோட்டார்ஸ் வசம் திட்டம் உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருடன் மோத வருகிறது.

 
English summary
Upcoming Car launches in India During This Festival Season.
Story first published: Wednesday, August 12, 2015, 10:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark