ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி ஃபோக்ஸ்வேகன் பீட்டில் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் 'ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில்' காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச விற்கபடும் அனைத்து மாடல் கார்களையும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ள புதிய 'ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய பீட்டில் அறிமுகத்தை பற்றி...

புதிய பீட்டில் அறிமுகத்தை பற்றி...

‘21-ஸ்ட் சென்சுரி பீட்டில் (21st Century Beetle)' அல்லது ‘ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில்' என்று அழைக்கபடும் புதிய பீட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது குறித்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உயர் அதிகாரி மைக்கேல் மேயர் மிகுந்த பெருமிதம் தெரிவித்தார்.

பீட்டில் ஒரு போற்றுதலுக்கு உரிய காராக இருந்து வந்துள்ளது, அது கடந்த 60 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் தனக்கென தனி பெயரை பெற்று வந்துள்ளது என மைக்கேல் மேயர் கூறினார்.

எக்காலத்திற்கும் பொருந்தும் அழகை கொண்டுள்ள பீட்டில், இக்காலத்திற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது என மைக்கேல் மேயர் தெரிவித்தார்.

புதிய பீட்டில் பற்றி...

புதிய பீட்டில் பற்றி...

ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில் மிக கம்பீரமான அமசங்களுடன் வருகின்றது. இந்த புதிய பீட்டில், எளிதில் வென்றிடவியலாத உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்கள் கொண்டுள்ளது.

புதிய பீட்டில், பீட்டில் கார்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில், 1.4 லிட்டர், டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது148 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பேடல் ஷிஃப்டர்கள் மூலம் கட்டுபடுத்த கூடிய 7-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம், ஃப்ரண்ட் வீலகளுக்கு பவர் டெலிவரி செய்யபடுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

இந்த ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில் கார் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய பீட்டில் காரில், கம்பைண்ட் கர்டைன் மற்றும் சைட் ஏர்பேக்கு-கள், ஃப்ரண்ட்-டில் பெல்ட் டென்ஷனர் கொண்ட 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் உள்ளன.

மேலும், இதில் டிரைவர் ஸ்டியரிங் ரெகமண்டேஷன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில் காரில் 8-ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ட்யூவல்-ஃஜோன் கிலைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது.

மேலும், இந்த புதிய பீட்டிலில், வியன்னா லெதர் ஸீட்கள், மல்டி-ஃபங்ஷன் டிஸ்பிளே கொண்ட லெதர்-ரேப்ட் (தோலால் மூடப்பட்டிருக்கும்) மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் மற்றும் ஆடியோ மற்றும் டெலிஃபோன் கண்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.

எங்கு கிடைக்கும்?

எங்கு கிடைக்கும்?

ஃபோக்ஸ்வேகன் ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில், தேர்வு செய்யபட்ட சில ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

ஃபோக்ஸ்வேகன் ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில், ஹாபெனெரோ ஆரஞ்ஜ், ஆரிக்ஸ் வைட், டார்னெடோ ரெட் மற்றும் ப்ளூ சில்க் உள்ளிட்ட 4 நிறங்களில் கிடைக்கின்றது.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் ட்வெண்டி ஃபர்ஸ்ட் சென்சுரி பீட்டில், 28.73 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Volkswagen launched their '21st Century Beetle' in India. Iconic 21st Century Beetle will be available only at select Volkswagen India outlets across India. Volkswagen '21st Century Beetle' is available in India at 28.73 Lakh Rupees, ex-showroom (Mumbai) price.
Story first published: Saturday, December 19, 2015, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X