ஃபோக்ஸ்வேகன் எமிசன் மோசடியால் இந்தியாவில் சிக்கும் பிரபல கார் மாடல்கள்!

By Saravana

ஆட்டோமெபைல் துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் மாசு அளவு குறித்து ஆய்வு செய்யுமாறு அராய் அமைப்பை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, விபரங்களை அளிக்குமாறு ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு அராய் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்தநிலையில், ஃபோக்ஸ்வேகன் மாசு அளவு பிரச்னையால் இந்தியாவில் விற்பனையான ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஆடி கார் நிறுவனங்களின் 14 கார் மாடல்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில், ஃபோக்ஸ்வேகன் தவறான மாசு அளவுகளை கொண்டதாக கருதப்படும் EA189 வகையறா டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த கார் மாடல்களின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

 ஆடி க்யூ3

ஆடி க்யூ3

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனே இந்தியாவில் பெரும் ஹிட் அடித்த மாடல். தொடர்ந்து விற்பனையில் ஆடி நிறுவனத்துக்கு முக்கிய பங்களிப்பை தந்து வருகிறது. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரை கவர்ந்த மாடல். ஆடி க்யூ3 எஸ்யூவியின் 2.0 லிட்டர் டிடிஐ டர்போ டீசல் எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் EA189 எஞ்சின் வகையறாவை சேர்ந்தது என்பதால், மாசு அளவு பிரச்னையில் சிக்கும் வாய்ப்புள்ளது.

ஆடி ஏ3

ஆடி ஏ3

ஆடி நிறுவனத்தின் ஆரம்ப நிலை சொகுசு செடான் கார் மாடலாகவும், விற்பனையில் முக்கியத்துவம் பெற்ற மாடலாகவும் இருக்கும் ஆடி ஏ3 காரின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினும் இப்போது சர்ச்சைக்கு இடமாகியுள்ளது. ஆரம்ப நிலை சொகுசு செடான் கார் என்பதால், இந்த காரும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், இப்போது ஃபோக்ஸ்வேகன் செய்த வேலையால் சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

ஆடி ஏ4

ஆடி ஏ4

இந்த சொகுசு செடான் கார் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இந்த சொகுசு காரின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்தான் விற்பனையில் அதிகம். அதுக்குத்தான் இப்போது ஃபோக்ஸ்வேகன் மோசடியால் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

ஆடி ஏ6

ஆடி ஏ6

பெரும் கோடீஸ்வரர்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது. அனைத்து பெரும் கோடீஸ்வரர்களின் கராஜிலும் இடம்பிடித்திருக்கும் இந்த கார் மாடலுக்கும் இப்போது எமிசன் பிரச்னையால் சிக்கல் எழுந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இஏ-189 வகையறாவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி க்யூ5

ஆடி க்யூ5

சினிமா நட்சத்திரங்களின் மனம் கவர்ந்த மாடலாக இருக்கும் ஆடி க்யூ5 எஸ்யூவி 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டிடிஐ டர்போ டீசல் எஞ்சின் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவியின் அதிக வேரியண்ட்டுகளில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

நல்ல பில்டு குவாலிட்டி கொண்டதோடு, ஓர் ஹேட்ச்பேக் என்றால் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வாயாற புகழ்ந்து வரும் மாடலுக்கு எமிசன் பிரச்னையால் சோதனை வந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டிடிஐ டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களும், தற்போதைய இரு விதமான ட்யூனிங் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் இஏ-189 குடும்ப வகையறாவை சேர்ந்ததே. இந்த டீசல் எஞ்சின் சகனில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகேன் வென்ட்டோ கார் கட்டுமானத்திற்கும், கையாளுமைக்கு பெயர் பெற்ற மாடல். இந்த காரில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என அனைத்துமே இஏ-189 குடும்பத்தை சேர்ந்தது. இது ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் அதிர்ச்சியை தரும் விஷயமாகவே இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா

ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா

2011 முதல் தற்போது வரை விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா காரின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் இஏ-189 வகையறா டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் பஸாத்

ஃபோக்ஸ்வேகன் பஸாத்

இந்தியாவில் இதுவரை விற்பனையில் இருந்த இரண்டு தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார்களிலுமே மாசு அளவு அதிகமாக இருக்கும் பிரச்னையில் சிக்கியிருக்கும் இஏ-189 குடும்பத்தை சேர்ந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ட்யூனிங்கில் வேறுபடுகிறது.

ஸ்கோடா ஃபேபியா

ஸ்கோடா ஃபேபியா

ஏற்கனவே ஸ்கோடா பிராண்டு இந்தியாவில் தடுமாறி வருகிறது. மோசமான வாடிக்கையாளர் சேவை, அதிக பராமரிப்பு செலவீனம் போன்றவற்றால் இந்திய வாடிக்கையாளர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில், இப்போது பூதாகரமாக கிளம்பியிருக்கும் எமிசன் பிரச்னை ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஸ்கோடா ஃபேபியா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டாலும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இந்த காரின் 1.2 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மாடல் இந்த பிரச்னைக்குரிய மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களை இழுத்து வந்து கொண்டிருக்கும் ஒரே சிறப்பான மாடல் ஸ்கோடா ரேபிட். டிசைன், தரம் என பல விதங்களிலும் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது. இப்போது அந்த வாடிக்கையாளர்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ரீபேட்ஜ் மாடலான ஸ்கோடா ரேபிட் காரின் டீசல் மாடலும் எமிசன் பிரச்னையில் சிக்கும் நிலை உள்ளது.

ஸ்கோடா ஆக்டாவியா

ஸ்கோடா ஆக்டாவியா

இந்தியாவில் ஸ்கோடா ஆக்டாவியா கார் மூன்று தலைமுறை கண்டுவிட்டது. முதல் தலைமுறை மாடலில் 1.9 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் இருந்தது. இரண்டாவது தலைமுறையான லாரா காரிலும், மீண்டும் மூன்றாவது தலைமுறை ஆக்டாவியா பெயரிலும் வந்த கார்களில் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மாடல் பிரச்னைக்குரியதாக கருதப்படுகிறது.

 ஸ்கோடா யெட்டி

ஸ்கோடா யெட்டி

ஏற்கனவே வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து எட்டியே நிற்கும் ஸ்கோடா யெட்டிக்கு இப்போது கூடுதல் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது. டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில், எமிசன் பிரச்னையில் சிக்கும் வாய்ப்புள்ளது. இந்த எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் மாடல் இப்போது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

 ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா சூப்பர்ப்

ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவில் இரண்டு தலைமுறைகளை கண்டுவிட்டது. அதில், இஏ-189 குடும்பத்தை சேர்ந்த 2.0 லிட்டர் டிடிஐ டர்போ டீசல் எஞ்சின் மாடல் இப்போது மாசு அளவு பிரச்னையில் சிக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Volkswagen Emission Scandal: Some Popular Indian Car Models Could Be Affect.
Story first published: Wednesday, September 30, 2015, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X