ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு, ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றிதழ்!

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் இந்தியா கார் நிறுவனம், ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றை பெற்றிருக்கிறது. இந்த சான்றை பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா பெற்றிருக்கிறது.

டியூவி இந்தியா மற்றும் டியூவி நார்ட் அமைப்பு சார்பாக, ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆலையில், இந்த மாத துவக்கத்தில் மூன்று நாள் தணிக்கை நடத்தபட்டது. அதனடிப்படையில், ஐஎஸ்ஓ 9001: 2015 சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், உலக அளவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்குள், ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றிதழ் பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய கார் உற்பத்தி ஆலை பெற்றிருக்கிறது.

ஐஎஸ்ஓ என்பது தி இண்டர்நேஷனல் ஆர்கனைசேஷன் ஃபார் ஸ்டாண்டர்டைசேஷன் என்பதை குறிக்கின்றது. ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் வெளியிடபட்டது.

volkswagen-india-receives-iso-9001-2015-certification-quality

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி ஆலை தான், ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றிதழ் (சர்டிஃபிகேஷன்) பெற விண்ணப்பித்த முதல் நிறுவனமாகும். மேலும், அனைத்து தகுதிகளும், மூன்று நாள் தணிக்கைகளின் உறுதிபடுத்தபட்டதை அடுத்து, ஃபோக்ஸ்வேகன் இந்தியா-வுக்கு இந்த ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றிதழ் வழங்கபட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை, பூனே அருகில் உள்ள சகன் என்ற இடத்தில் உள்ளது. ஜெர்மானிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்குவதில் முழு முனைப்புடன் உள்ளனர்.

தற்போது, கிடைத்துள்ள இந்த ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்று, ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் நோக்கத்தை கோடிட்டு உறுதி செய்வது போல் அமைந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், மாசு உமிழ்வு சோதனைகளில் தேறுவதற்காக செய்த டீசல் இஞ்ஜினின் மென்பொருள் ஊழலால், அந்த நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் அவபெயர் உண்டாகியது. சமீபத்தில் தான், ஃபோக்ஸ்வேகன் குழுமம், இந்திய சந்தைகளில் இருந்தும் சில கார்களை ரீகால் செய்யும் நிலை ஏற்பட்டது.

தற்போது, ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கு கிடைத்துள்ள இந்த ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்று), அந்த அவபெயரின் தாக்கத்தை கட்டாயம் ஓரளவிற்காவது குறைக்க உதவும்.

volkswagen-india-receives-iso-9001-2015-certification-for-quality

ஐஎஸ்ஓ 9001 : 2015 தர சான்றிதழ் என்பது சர்வதேச அளவில் வழங்கப்படும் ஓர் உயரிய தர சான்றிதழ் ஆகும். இந்த தர சான்றிதழை பெறும் முதல் நிறுவனமாக திகழவதில், ஃபோக்ஸ்வேகன் இந்தியா கட்டாயம் பெறுமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஃபோக்ஸ்வேகன் குழுமம் சார்பாக, தற்போது இந்திய சந்தைகளில் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட 5 பிராண்ட்களின் கார்கள் விற்கபட்டு வருகின்றது.

ஃபோக்ஸ்வேகன் குழுமம் தங்களின் கட்டுபாட்டில், 12 பிராண்ட்களை நிர்வகித்து வருகின்றது. தங்கள் குழுமத்தின் சார்பாக, இந்தியாவில் விற்கபடாமல் உள்ள சில பிராண்ட்களையும் இந்தியாவிற்குள் விரைவில் கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Volkswagen India has become the first company to receive an ISO 9001:2015 certification. Regarding this certification, TÜV India and TÜV Nord Group conducted a three-day audit earlier at the beginning of December 2015. Post this Audit, Volkswagen's India facility has become the first company to be certified ISO 9001:2015 within the VW Group.
Story first published: Thursday, December 17, 2015, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X