ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச மாணவர்கள் திரைப்பட விழாவினை வழங்குகின்றது

Written By:

ஃபோக்ஸ்வேகன் இந்தியா சர்வதேச மாணவ திரைப்பட போட்டியினை ஸ்பான்சர் செய்கிறது.

ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், இண்ட்ர்நேஷனல் ஸ்டூடண்ட் ஃபில்ம் காம்பட்டிஷன் எனப்படும் போட்டியினை நடத்த உள்ளது.

பூனே இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் அல்லது பிஐஎஃப்எஃப் என்று அழைக்கபடும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த சர்வதேச ஸ்டூடண்ட் பட போட்டி, 14 ஜனவரி 2016 முதல் 21 ஜனவரி 2016 வரை நடைபெற உள்ளது

தி ஃபோக்ஸ்வேகன் இண்டர்நேஷனல் ஸ்டூடண்ட் ஃபில்ம் காம்பட்டிஷன், மும்பையில் உள்ள விஸ்ட்லிங் உட்ஸ் இண்டெர்நேஷன்ல் இன்ஸ்டிட்யூட் மூலம் நடத்தபடுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், 'லைவ் ஆக்‌ஷன்' மற்றும் 'அனிமேஷன்' என்ற 2 பிரிவுகளில் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்கும் படங்கள், திறன்மிக்க நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யபடுகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருக்கும் ஃபில்ம் ஸ்கூல்களில் இருந்து உள்ளீடுகள் (எண்ட்ரீகள்-படங்கள்) வரவேற்கபடுகிறது.

'லைவ் ஆக்‌ஷன்' என்ற தலைப்பில் நடத்தபடும் போட்டியில், பெஸ்ட் ஃபில்ம் (சிறந்த படம்), பெஸ்ட் டைரக்டர் (சிறந்த இயக்குனர்), பெஸ்ட் ஸ்க்ரீன்பிளே (சிறந்த திரைக்கதை), பெஸ்ட் சினிமேடோகிட்ராஃபர் (சிறந்த ஒளிப்பதிவாளர்) மற்றும் பெஸ்ட் ஆடியோகிராஃபர் (சிறந்த ஒலிப்பதிவாளர்) உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கபடுகிறது. இந்த விருதுகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகின்றது.

volkswagen-India-support-international-student-film-competition-PIFF-pune

அனிமேஷன் என்ற தலைப்பில் நடத்தபடும் போட்டியில், 'பெஸ்ட் ஃபில்ம் - இந்தியா' (சிறந்த படம் - இந்தியா) மற்றும் 'பெஸ்ட் ஃபில்ம் - இண்டெர்நேஷனல் (சிறந்த படம் - உலகம்) என்ற 2 பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு விருதுகளில் வழங்கபடுகிறது.

பூனே இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் அல்லது பிஐஎஃப்எஃப் எனப்படும் இந்த சர்வதேச திரைப்பட விழா, 2002-ஆம் ஆண்டில் துவங்கபட்டது. இது, பூனே ஃபில்ம் ஃப்வுண்டேஷன் மற்றும் மஹாராஷ்திரா அரசு மூலமாக கூட்டாக நடத்தபடுகிறது.

14-வது பதிப்பாக நடத்தப்படும் இந்த ஆண்டின் பிஐஎஃப்எஃப் சர்வதேச திரைப்பட விழா, 7 மையங்களில் நடத்தபடுகிறது.

சிட்டி பிரைட் கோத்ரூட், சிட்டி பிரைட் சதாரா ரோட், சிட்டி பிரைட் ஆர்-டெக்கான், மங்களா காம்பிளக்ஸ், ஐநாக்ஸ் கேம்ப், பூனே நகரத்தில் நேஷனல் ஃபில்ம்ஸ் ஆர்கிவ்ஸ் ஆஃப் இந்தியா (லா காலேஜ் கிரவுண்ட்), பிசிஎம்சி பகுதியில் உள்ள 2 விரிவாக்கம் செய்யபட்ட 2 மையங்களில் நடத்தபடுகிறது.

English summary
Volkswagen India is to Support International Student Film Competition, which is held as part of the Pune International Film Festival (PIFF), which takes place from 14 to 21 January, 2016. Students can participate in two categores, which are called as 'Live Action' and 'Animation'.
Story first published: Wednesday, December 23, 2015, 12:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark