டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது ஃபோக்ஸ்வேகன் மினி செடான்!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி டிசையர் காரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில், 6வது மாடலாக இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் களமிறங்க உள்ளது.

முதலீடு

முதலீடு

கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்தது. அதில், புதிய எஞ்சின் உற்பத்தி பிரிவுக்கும், இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் உருவாக்கத்திற்கும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் உருவாக்கத்திற்கு ரூ.720 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, வென்ட்டோ கார்களின் அடிப்படையிலான மாடல்தான் இந்த புதிய காம்பேக்ட் செடான் காரும். அதாவது, மினி வென்ட்டோ செடான் காராக மாற்றப்பட்டிருக்கிறது.

வரிச்சலுகை

வரிச்சலுகை

இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும். இதன்மூலமாக, ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான வரிச்சலுகையுடன் விற்பனை செய்ய வழிபிறந்துள்ளது. இந்த புதிய காரை மிக சவாலான விலையில் வரும் வாய்ப்பு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு உள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

முழுக்க முழுக்க இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த காரை வடிவமைத்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், இந்த காரை ஏற்றுமதி செய்யும் திட்டமும் அந்த நிறுவனத்துக்கு உள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

புனே அருகே சகனிலுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் பெயர் விபரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிமுகம்

அறிமுகம்

வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, புனே ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

முக்கிய குறிப்பு: மாதிரிக்காக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 
English summary
Volkswagen India has onfirmed to premiere new compact sedan at Auto Expo 2016

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark