இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் லிமிடேட் எடிசன் அறிமுகம்
பண்டிகை காலத்தையொட்டி, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் பொருந்திய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
போலோ எக்ஸ்கொயெஸெட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் அம்சங்கள்
வெளிப்புறத்தில் டெயில் கேட்டில் க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பாடி மோல்டிங் மற்றும் சைடு மிரர்கல் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், கூரையும் கருப்பு வண்ணத்தில் இருப்பது மிக கவர்ச்சியாக தெரிகிறது.

இன்டிரியர்
உட்புறத்தில் பிரத்யேக ஸ்கஃப் பிளேட்டுகள், மிதியடிகள், க்ரீம் அல்லது பீஜ் வண்ணத்திலான சீட் கவர்கள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கினறன.

சென்டர் கன்சோல்
சென்டர் கன்சோல் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ஜன்னல்களுக்கான திரையும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்
எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் போலோ கார் கிடைக்கும். ஏபிஎஸ் மற்றும் டியூவல் ஏர்பேக்ஸ் கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை விபரம்
போலோ எக்ஸ்கொயெஸெட் எடிசனின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.6.57 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.92 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








