இந்தியாவில் 389 போலோ கார்களை திரும்ப அழைக்கிறது ஃபோக்ஸ்வேகன்!
ஹேண்ட் பிரேக்கில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 389 போலோ கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திரும்ப அழைக்க உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட போலோ கார்களின் ஹேண்ட் பிரேக்கில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஹேண்ட் பிரேக் பிடிக்கும்போது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பின்புற பிரேக் லைனர்கள் உடைந்து, ஹேண்ட் பிரேக் செயலிழக்கும் ஆபத்து இருக்கிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார்களை உடனடியாக ஆய்வு செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் டீலர்களை அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், கடந்த மாதம் தயாரிக்கப்பட்டு டெலிவிரிக்கு காத்திருக்கும் கார்களையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
இரு நாட்களுக்கு முன் இதுதொடர்பாக, டீலர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








