புதிய வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி... எஸ்யூவி அம்சங்களுடன் ஓர் செடான்!!
எஸ்யூவியின் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட தனது முதல் கிராஸ்ஓவர் செடான் கார் மாடலின் படங்கள் மற்றும் விபரங்களை வால்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வர இருக்கும் இந்த புதிய கிராஸ்ஓவர் செடான் ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. விசேஷ டிசைன் அம்சங்கள் கொண்ட இந்த காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் கண்டு களியுங்கள்.

கிராஸ்கன்ட்ரி
1997ம் ஆண்டு முதல் கிராஸ் கன்ட்ரி மாடலை வால்வோ அறிமுகம் செய்தது. வி40, வி60 மற்றும் வி70 போன்ற கிராஸ் கன்ட்ரி மாடல்கள் வரிசையில் முதல்முறையாக எஸ்60 காரின் அடிப்படையிலான கிராஸ் கன்ட்ரி செடான் கார் மாடலை வால்வோ அறிமுகம் செய்துள்ளது.

டிசைன் சிறப்பம்சம்
சாஃப்ட் ஆஃப்ரோடு அம்சங்களுக்கு ஏற்ற மாடலாக இந்த செடான் கார் கூறப்படுகிறது. எஸ்யூவி போன்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகல் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். அதேவேளை செடான் காரை போன்ற சொகுசு அம்சங்கள் கொண்டதாகவும் இருக்கும். இது 4 டோர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

அம்சங்கள்
இந்த காரின் உயரம் 2.5 இஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டி5 வேரியண்ட்டில் 18 அல்லது 19 இஞ்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 250 எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

டீசல் மாடல்
ஐரோப்பாவில் 190 எச்பி பவரை அளிக்கும் டீசல் எஞ்சினும், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








