வால்வோ நிறுவனத்தின், எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான் கார் அறிமுகம்

By Ravichandran

வால்வோ நிறுவனம், தங்களின் எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான்களை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது.

சமீப காலமாக, பல்வேறு சொகுசு கார் நிறுவனங்கள், போட்டி போட்டு கொண்டு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

வால்வோ எஸ்90 அறிமுகத்தின் நோக்கம்;

வால்வோ எஸ்90 அறிமுகத்தின் நோக்கம்;

வால்வோ நிறுவனம், இந்த வால்வோ எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான்களை அறிமுகம் செய்வதற்கான முக்கிய நோக்கமே, மெர்சிடிஸ் ஈ கிளாஸ், பிஎம்டபுள்யூ 5 சீரிஸ், ஆடி ஏ6, ஜாகுவார் எக்ஸ்எஃப் உள்ளிட்ட மாடல்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிப்பதற்காக தான் என தெரிகிறது.

கட்டுமானம்;

கட்டுமானம்;

இந்த எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான், வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியில் உபயோகிக்கப்படும் சேம் ஸ்கேலபல் பிராடக்ட் ஆர்கிடெக்சர் எனப்படும் கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

எக்ஸ்சி90 எஸ்யூவியில் உபயோகிக்கப்படும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின்கள் இதிலும் உபயோக்கிக்கபடுகின்றது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

வால்வோ எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான்களில் இரண்டு விதமான சஸ்பென்ஷன் தேர்வுகளுடன் கிடைக்கின்றது.

வழக்கமாக கிடைக்கும் ஸ்டீல் சஸ்பென்ஷன் அல்லது ஏர் சஸ்பென்ஷன் ஆகிய இரண்டு சஸ்பென்ஷன் தேர்வுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர் (வெளிப்புற) அம்சங்களை பொருத்த வரை, எக்ஸ்சி90 எஸ்யூவியில் இருந்து சில அம்சங்கள் இதிலும் சேர்க்கபட்டுள்ளது.

இந்த வால்வோ எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடானில், எல்ஈடி ஹெட்லைகள், ‘தோர்'ஸ் ஹாம்மர்' டே டைம் ரன்னிங் லைட்கள் உள்ளது.

மேலும், கான்கேவ் கிரில், இதில் புதிய அம்சமாக சேர்க்கபட்டுள்ளது.

பழைய வால்வோ சலூன்களை காட்டிலும், இந்த எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான் மிக நேர்த்தியாக உள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இண்டீரியர் (உட்புற) அம்சங்களை பொருத்த வரை, இதில் அதிக அளவில் மரம் மற்றும் லெதர் உபயோகிக்கபட்டுள்ளது.

வால்வோ எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடானின் இண்டீரியரில், இன்ஃபோடெய்ன்மெம்ட் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் 8 இஞ்ச் டிஸ்பிளேவும் உள்ளது.

இதன் மூலம், சவுண்ட் சிஸ்டம் முதல், சேட்டலைட் நேவிகேஷன் மற்றும் கிளைமேட் (வெப்பநிலை) கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பலவற்றை கட்டுபடுத்த முடியும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

வழக்கம் போல், வால்வோ நிறுவனம் ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்த எஸ்90 செடானில், சிட்டி சேஃப்டி டெக்னாலஜி மற்றும் லார்ஜ் அனிமல் டிடெக்‌ஷன் டெக்னாலஜி (பெரிய மிருகங்கள் கண்டறியும் தொழில்நுட்பம்) உள்ளது.

மேலும், இந்த வால்வோ எஸ்90 எக்சிக்யூட்டிவ் செடான் காரில் பைலட் அசிஸ்ட் செமி-ஆட்டோனமஸ் சிஸ்டம், செல்ஃப்-டிரைவிங் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளது.

Most Read Articles
English summary
Volvo has unveiled their S90 Executive Sedan Car in an event in Gothenburg. This Volvo S90 Executive Sedan model was introduced to compete with the Cars like the Mercedes E Class, BMW 5 Series, Audi A6 and the Jaguar XF.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X