புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆர் காருக்கு முன்பதிவு முடிந்தது!
அமெரிக்க மார்க்கெட்டிற்காக பிரத்யேக அம்சங்கள் கொண்ட புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய கோல்ஃப் ஆர் மாடலில் அனைத்து கார்களும் ஒரே வண்ணத்திலும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 8ந் தேதி இந்த பிரத்யேக மாடலுக்கான முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டது. 8ந் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கி 11 மணி நேரத்தில் முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் 500 கார்களுக்கும் முன்பதிவு முடிந்தது.
இந்த காரை வாங்க விரும்பி முட்டி மோதிய வாடிக்கையாளர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். யாரேனும் முன்பதிவை ரத்து செய்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிர்ஷ்டசாலிக்கு இந்த கார் கிடைக்கும்.
லேபிஸ் புளூ மெட்டாலிக் வண்ணம், 19 இஞ்ச் அலாய் வீல்கள், 6 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், டைனமிக் சேஸீ கன்ட்ரோல், பிரிமியம் ஆடியோ சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்க கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் தொழில்நுட்பங்களாக இருக்கும்.
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரியின்போது ஆர் பேட்ஜ் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கீ செயின் உள்ளிட்ட பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த காரில் 292 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்ுகம். 0 - 96 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டது. மணிக்கு 249 கிமீ வேகம் செல்லும் கட்டமைப்பு கொண்டது. 37,415 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








