இத்தாலிய டிசைன் ஸ்டூடியோவில் உருவான உலகின் முதல் ஹைப்பர் எஸ்யூவி!!

Written By:

சூப்பர் கார், ஹைப்பர் கார், சூப்பர் எஸ்யூவி வகைகளில் தற்போது புதிதாக ஹைப்பர் எஸ்யூவி கான்செப்ட் மாடல் ஒன்றை இத்தாலிய கார் டிசைன் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டிருக்கிறது.

பார்ப்பதற்கு சூப்பர் கார் போலவும், சூப்பர் க்ராஸ்ஓவர் போலவும் தோற்றமளிக்கும் இந்த புதிய கார் கான்செப்ட் மாடலை ஹைபிரிட் ரக ஹைப்பர் எஸ்யூவியாக இதனை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் முதல் ஹைப்பர் எஸ்யூவி என்று மார்தட்டும் இந்த புதிய கான்செப்ட்டின் படங்கள், விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

இத்தாலிய டிசைன் ஸ்டூடியோ

இத்தாலிய டிசைன் ஸ்டூடியோ

இத்தாலியை சேர்ந்த கேமல் என்ற கார் டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் அலிசான்ட்ரோ கேமரோலி என்பவர்தான் இந்த புதிய ஹைப்பர் எஸ்யூவியை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார். இவர் இத்தாலியின் புகழ்பெற்ற பெர்டோன் கார் டிசைன் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமல் ரமூசா

கேமல் ரமூசா

இந்த ஹைப்பர் எஸ்யூவி கான்செப்ட்டிற்கு கேமல் ரமுசா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கிரவுன்ட் கிளியரன்ஸ் அதிகம்

கிரவுன்ட் கிளியரன்ஸ் அதிகம்

அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்ட சூப்பர் கார் போன்றே இதனை உருவாக்கியிருக்கிறார் கேமரோலி. ஆம், இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் 250மிமீ என்பதை மனதில் வைக்கவும்.

வடிவம்

வடிவம்

இந்த கான்செப்ட் மாடல் 4,320மிமீ நீளமுமம், 2,020மிமீ அகலமும், 1,300மிமீ உயரமும் கொண்டது.

புகாட்டி எஞ்சின்

புகாட்டி எஞ்சின்

இந்த ஹைப்பர் எஸ்யூவியில் புகாட்டியின் 3.5 லிட்டர் வி12 க்வாட் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 1991 முதல் 1995 வரை தயாரிக்கப்பட்ட புகாட்டி இபி110 ஸ்போர்ட்ஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே எஞ்சின்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பவர்

பவர்

இந்த காரில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இதன் எஞ்சின் 800 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

புகாட்டி பாகங்கள்

புகாட்டி பாகங்கள்

கார்பன் ஃபைபர் சேஸியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் பல பாகங்கள் புகாட்டியிலிருந்து காரின் உதிராபாகங்களாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமர்ப்பணம்

சமர்ப்பணம்

ஏற்கனவே பணிபுரிந்த பெர்டோன் நிறுவனத்தின் நிறுவனருக்கு இந்த காரை சமர்ப்பணம் செய்வதாக கேமரோலி தெரிவித்துள்ளார்.

ஆஃப்ரோடு மாடல்

ஆஃப்ரோடு மாடல்

இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஆஃப்ரோடு எஸ்யூவிகளைவிட அதிகம் இருப்பதுடன், மிகவும் விசாலமான வீல் ஆர்ச்சுகளையும் கொண்டுள்ளது.

தயாரிப்பு செல்கிறது

தயாரிப்பு செல்கிறது

கான்செப்ட்டாக மட்டுமே காட்டி நிறுத்திவிடாமல், இதனை தயாரிப்பு நிலைக்கு எடுத்தச் செல்லவும் கேமரோலி திட்டமிட்டிருக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யவும் கேமரோலியிடம் திட்டம் உள்ளது.

 

English summary
Italian design centre Camal Studio has come up with the Ramusa, a hybrid concept that bridges the supercar to that of a super-crossover, or something along those lines. Dubbed as a hyper-SUV, the study is claimed by the design studio to be the first concept of its kind derived from a pure sports layout.
Story first published: Thursday, December 17, 2015, 18:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more