யமஹா ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் டீசர் வெளியீடு... டோக்கியோவில் காட்சிக்கு வருகிறது.

By Saravana

வரும் 28ந் தேதி துவங்க இருக்கும் டோக்கியோ ஆட்டோ ஷோவில் புதிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை யமஹா அறிமுகம் செய்ய இருக்கிறது.

இருசக்கர வாகன தயாரிப்பில் உலக புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான யமஹா, நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறது.

இந்த நிலையில், டோக்கியோ ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும், புதிய கான்செப்ட் மாடலின் டீசரை தற்போது வெளியிட்டு ஆட்டோமொபைல் துறையினரையும், யமஹா பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

4 வீலர் ஆசை

4 வீலர் ஆசை

ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்களில் புகழ்பெற்ற யமஹாவுக்கு கார் தயாரிப்பு என்பது புதிதல்ல. 1992ல் OX99-11 என்ற ஸ்போர்ட்ஸ் கார் புரோட்டோடைப் மாடலை அறிமுகம் ெய்தது. 1994ல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட இருந்த இந்த கார், முதலீடு பற்றாக்குறையால் அந்த கார் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

Photo Credit: Wikimedia Commons

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

கடந்த 2013ம் ஆண்டில் மோட்டிவ் - இ என்ற எலக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது குறித்த தகவலை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு பகிர்ந்து இருந்தோம். அது மிகவும் பிரத்யேகமான எலக்ட்ரிக் கார் மாடல். அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் இறங்குவதற்கு யமஹா ஆயத்தமாகி உள்ளது.

டீசர்

டீசர்

யமஹா 4வீலர் என்று குறிப்பிடப்படும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட்டின் டிசைன் மிகவும் தனித்துவமாகவும், தங்களது மோட்டார்சைக்கிளின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும் என்று யமஹா தெரிவித்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

2013ம் ஆண்டு இரண்டு இருக்கை கொண்ட கார் மாடலை தயாரிக்க இருப்பதாக யமஹா தெரிவித்தது. அத்துடன், அந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், தற்போது டீசரில் வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட்டிலும் 1.0 லிட்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

கார் எஞ்சின் தயாரிப்பு

கார் எஞ்சின் தயாரிப்பு

யமஹா நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தி தவிர்த்து, கார் எஞ்சின் தயாரிப்பிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஃபோர்டு, வால்வோ மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கான கார் உதிரிபாகங்களையும், கார் எஞ்சினையும் சப்ளை செய்து வருகிறது. கார் தயாரிப்பில் மிக சவாலான விஷயம், அதற்கான எஞ்சின் தயாரிப்புதான். அதில், யமஹாவுக்கு போதிய அனுபவமும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால், விரைவாக உற்பத்தி நிலை மாடலை வெளியிடும் வாய்ப்புள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்லப்படுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆனாலும், டோக்கியோ ஆட்டோ ஷோவில் இது குறித்த தகவல்களை யமஹா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 2019ல் கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் திட்டமும் யமஹாவிடம் இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 17, 2015, 15:25 [IST]
English summary
A teaser image of the concept, dubbed the Yamaha 4Wheeler, shows the silhouette of a sports coupe with very pronounced fenders.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+