டிசம்பர் என்றாலே டிஸ்கவுண்ட்தானே... கார்களுக்கான சேமிப்புச் சலுகைகள் விபரம்!

By Saravana

புத்தாண்டில் கார் வாங்க பலர் திட்டமிடுவதால் பொதுவாக புத்தாண்டில் கார் விற்பனை டல்லடிக்கும். அதேநேரத்தில், கடைசி நேர விற்பனை இலக்கை எட்டுவதற்காகவும், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களின் இருப்பை குறைக்கவும் கார் நிறுவனங்கள் டிஸ்கவுன்ட்டுகளை கொடுப்பது வழக்கம்.

அவ்வாறு, தற்போது ஆண்டு கடைசி நேரம் நெருங்கி வருவதால், பல நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் சேமிப்புச் சலுகைகளை வழங்குகின்றன. இந்த டீல் சிறப்பாக இருந்தால் கார் வாங்கும் திட்டத்தை ஒத்திப் போட வேண்டாம். ஏனெனில், புத்தாண்டில் கார் விலையை உயர்த்தும் வாய்ப்பும் உண்டு.

புதிய ஃபோர்டு ஃபிகோ

புதிய ஃபோர்டு ஃபிகோ

சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த புதிய ஃபோர்டு ஃபிகோ கார் சுமாரான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஃபோர்டு நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. எனவே, தற்போது சில டீலர்களில் இலவச இன்ஸ்யூரன்ஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புடைய சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

போட்டி மாடலான மாருதி செலிரியோ, தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ், டீசல் மாடல்களில் கிடைப்பதால், ஹூண்டாய் ஐ10 காரின் விற்பனை குறைந்து வருகிறது. இந்த சூழலில் ஆண்டு கடைசி விற்பனையை அதிகரிக்கும் விதமாக, இந்த காருக்கு ரூ.16,000 மதிப்புடைய இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.14,000 விலையில் தள்ளுபடி போன்ற சலுகைகளை ஹூண்டாய் நிறுவனமும், அதன் டீலர்களும் வழங்குகின்றனர். மேலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.20,000 வரை பெறும் வாய்ப்புள்ளது. மொத்தமாக ரூ.50,000 மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

இடவசதி, நம்பகமான எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருந்தாலும், டிசைன் அவ்வளவாக கவரவில்லை. எனவே, ஹோண்டா பிரியோ காரின் விற்பனை படுமந்தமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் ஹோண்டா பிரியோ காருக்கு ரூ.20,000 மதிப்புக்கான சேமிப்பு சலுகைகளை ஹோண்டா கார் நிறுவனம் வழங்குகிறது.

டாடா போல்ட்

டாடா போல்ட்

இடவசதி, சிறப்பு வசதிகள் நிரம்ப பெற்ற டாடா போல்ட் காருக்கு சந்தைப் போட்டி கடுமையாக இருக்கிறது. எனவே, விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், போல்ட் காரின் விலையில் நேரடியாக ரூ.20,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.40,000 வரையிலும் பெறும் வாய்ப்புள்ளது. மொத்தமாக ரூ.60,000 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும்.

டாடா போல்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

மாருதி எஸ் கிராஸ்

மாருதி எஸ் கிராஸ்

மாருதி எஸ் கிராஸ் காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது லாயல்டி போனசாக ரூ.30,000 வரையில் பெறும் வாய்ப்புள்ளது. மாருதியின் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்படும் இந்த கார் மிகச்சிறந்த டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா தரும் நெருக்கடியால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திலிருந்து அவ்வப்போது பல்வேறு சலுகைகளை மாருதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. மேலும், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா டியூவி300 போன்ற புதிய வரவுகளால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை பலர் மறந்துவருகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக சிறப்பு சலுகைகள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.25,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறும் வாய்ப்பு உள்ளது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டி காரணமாக தற்போது ஓர் சிறந்த தயாரிப்பாக விளங்கும் ஹோண்டா அமேஸ் தள்ளுபடியுடன் வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ்

சியாஸ் கார் மூலமாக ஹோண்டா சிட்டி காரின் விற்பனையை உடைக்க மாருதி கற்ற வித்தைகளையும் போட்டுக் காட்டி வருகிறது. தற்போது சியாஸ் காருக்கு ரூ. 10,000 நேரடி தள்ளுபடியாகவும், சில டீலர்களில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது.

நிசான் சன்னி

நிசான் சன்னி

மிட்சைஸ் மார்க்கெட்டில் மிகச் சிறப்பான இடவசதி கொண்ட மாடல் நிசான் சன்னி. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, தோற்றத்தில் பின்தங்கிவிடுகிறது.அத்துடன் குறைவான சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் இந்த கார் மீதான ஈர்ப்பை குறைக்கிறது. இதனால், நிசான் சன்னி காரின் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், ஆண்டு கடைசி விற்பனைக்காக பெட்ரோல் மாடலுக்கு ரூ.75,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.45,000 வரையிலும் டிஸ்கவுன்ட் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மாடலிலும் நிசான் சன்னி கிடைக்கிறது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஆணழகன் ஹூண்டாய் வெர்னா கார் இப்போது ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, விற்பனையை உயர்த்துவதற்காக சிறப்புச் சலுகைகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் வழங்குகிறது. அதிகபட்சமாக ரூ.25,000 வரையிலான டிஸ்கவுன்ட்டுகளை பெறும் வாய்ப்புகளை டீலர்கள் வழங்குகின்றன.

டிசம்பரில் கார்களுக்கான டிஸ்கவுன்ட் விபரம்

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை எமது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இரவு 8.30 மணிக்கு படிக்கத் தவறாதீர்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

More from DriveSpark

Article Published On: Saturday, December 5, 2015, 11:25 [IST]
English summary
Wondering what all discounts and deals are available on cars this December? We do the legwork for you to help you benefit from the year-end bonanza!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+