ரெனோ லாட்ஜிக்கு முன்பதிவு செய்யுமுன் தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!!
டஸ்ட்டருக்கு அடுத்து ரெனோவிடமிருந்து அதிக எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் மாடல் லாட்ஜி எம்பிவி கார். இந்த காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதையடுத்து, மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோவை விட்டு இந்த காரில் கூடுதலாக என்ன இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் அலச துவங்கியுள்ளனர்.
இந்த காரை முன்பதிவு செய்வதற்கு முன் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள விரும்பும் சில முக்கிய சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

01. முன்பணம்
ரூ.50,000 முன்பணம் பெற்றுக்கொண்டு ரெனோ டீலர்களில் புதிய லாட்ஜி எம்பிவி காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவை ரத்து செய்தால், முழுவதும் முன்பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. இடவசதி
இந்த செக்மென்ட்டில் மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும் கார் மாடலாக லாட்ஜி இருக்கும். இந்த காரின் விற்பனை இந்த விஷயத்தை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும்.

03. டீசலில் மட்டுமே...
டீசல் மாடலில் மட்டுமே வருகிறது. ஆனால், டஸ்ட்டரை போன்றே இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ள முடியும். ஒன்று 83.80 எச்பி பவரை அளிக்கும் மாடலிலும், மற்றொன்று 108.45 எச்பி பவரை அளிக்கும் விதத்திலும் கிடைக்கும்.

04. இருவிதமான இருக்கை வசதி
இருவிதமான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு மாடல் 7 பேர் அமரும் இருக்கை வசதி கொண்டதாகவும் மற்றொரு மாடல் 8 பேர் அமரும் இருக்கை அமைப்பு கொண்டதாகவும் கிடைக்கும்.

05. மைலேஜ்
அராய் சான்றுபடி, 85 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும், 110 பிஎஸ் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜை வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

06. எதிர்பார்க்கும் விலை
ஆரம்ப ரக மாடல் ரூ.8 லட்சம் முதல் அனைத்து வசதிகளும் கொண்ட உயர்வகை மாடல் ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது விற்பனை?
முன்பதிவு செய்தவுடனே இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்று உங்கள் எதிர்பார்ப்பு ஆர்ப்பரிக்க துவங்கும். இந்த கார் வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








