ஜரூக் ஸேண்ட்ரேஸர்... அரபு நாட்டில் உருவான புதிய ஆஃப்ரோடு வாகனம்

Written By:

ஃஜரூக் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான வாகனங்கள் அறிமுகம் செய்யபடுகிறது. ஃஜரூக் ஸாண்ட்ரேஸர் வாகனத்தை பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஃஜரூக் மோட்டார்ஸ் நிறுவனத்தை பற்றி...

ஃஜரூக் மோட்டார்ஸ் நிறுவனத்தை பற்றி...

ஃஜரூக் மோட்டார்ஸ் என்ற புதிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.

இந்த நிறுவனம் உபயோகத்திற்கு தயார் நிலையில் உள்ள, ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் என்ற வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் பற்றி;

ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் பற்றி;

இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர், துபாயில் ஒரே நிறுவனத்தின் கார்களை கொண்டு நடத்தப்பட உள்ள ரேசிங் போட்டிகளில் உபயோகிப்பதற்காக தயாரிக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் கார், ஆண்டனி ஜானரெல்லி என்பவர் மூலம் வடிவமைக்கபட்டுள்ளது.

இவர் தான் டபுள்யூ மோட்டார்ஸ் லைகான் மற்றும் ஃபெனிர் உள்ளிட்ட வாகனங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர், 3.5 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 304 பிஹெச்பி-யையும், 371 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர், 400 பிஹெச்பி-யையும் அல்லது 500 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் வகையில் ட்யூன் செய்யபடுகிறது. இது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் பவர் டெலிவரி செய்கிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர், இண்டீரியரில் ஸ்போர்ட்ஸ் சீட்கள், 4 பாயிண்ட்கள் க்விக் ரிலீஸ் ஹார்னெஸ் மற்றும் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், இன்னும் சொகுசான சீட்கள், கப் ஹோல்டர்கள் மற்றும் கிளௌஸ் பாக்ஸ்கள் கொண்டுள்ளது.

வெளிபுறத்தில், இந்த ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் பிரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்ஈடி டர்ன் சிக்னல்கள் கொண்டுள்ளது.

சாலைகளில் இயக்ககூடியது;

சாலைகளில் இயக்ககூடியது;

ஃஜரூக் ஸேண்ட்ரேஸர் சிறந்த ஆஃப்ரோட் வாகனமாக உள்ள அதே நேரத்தில், சாலைகளிலும் இயக்கும் வகையில் உள்ளது.

இதனால், இதை ரேசிங் மற்றும் சாலைகள் பயன்பாடுகளுக்கு இரண்டிற்கும் உபயோகிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Zarooq Motors has Unveiled their Zarooq SandRacer. The start-up automaker Zarooq Motors, based in the UAE has unveiled the Production ready version of the Zarooq SandRacer. This seems to be a good off-roader and Street-legal Car for the customers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark