அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கும் புதிய கார்கள்: டிரைவ்ஸ்பார்க் வாசகர்களின் ஆதரவு யாருக்கு?

Written By:

பண்டிகை காலத்தையொட்டி பல புதிய கார் மாடல்கள் வரிசை கட்ட காத்திருக்கின்றன. அதைத்தொடர்ந்து, புத்தாண்டு வரை வர இருக்கும் பல புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை ஆவலோடு காத்திருக்கச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், விரைவில் வர இருக்கும் புதிய கார் மாடல்களில் எமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் புதிய கார் மாடல்கள் குறித்த கருத்துக் கணிப்பு ஒன்றை டிரைவ்ஸ்பார்க் தளம் கடந்த ஒரு வாரமாக நடத்தியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 கார் மாடல்களின் பட்டியலை கொடுத்திருந்தோம். அதில், வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளித்த ஆதரவின்படி, அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றிருக்கும் மாடல்களை இங்கே வரிசைப்படுத்தி வழங்கியிருக்கிறோம்.

 10. செவர்லே எசென்சியா செடான்

10. செவர்லே எசென்சியா செடான்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கப்படும் செவர்லே எசென்சியா செடான் கார் 10வது இடத்தை பிடித்தது. மொத்தம் 42 வாக்குகளுடன் மொத்த ஓட்டுகளில் 3 சதவீதத்தை மட்டுமே இந்த கார் பெற்றதால் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.

 கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

தற்போது விற்பனையில் இருக்கும் செவர்லே பீட் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் கார் மாடலாக இது விற்பனைக்கு வர இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுடன் நேரடியாக போட்டி போடும். பேஸ் மாடல்களிலும் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். ரூ.5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

09. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

09. ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ

எமது கருத்துக் கணிப்பில் 53 வாக்குகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது. மொத்த வாக்குகளில் 4 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அதிசக்திவாய்ந்த மாடலாக வர இருக்கிறது. மேலும், இந்தியாவின் முதல் 3 கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாகவும் அறிமுகமாகிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ மாடலில் இருக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 189.3 பிஎச்பி பவரையும், 250என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இதன் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம். மணிக்கு 236 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமையை பெற்றிருக்கும். இதற்கு தக்கவாறான வலிமையான சஸ்பென்ஷன் மற்றும் கட்டமைப்பு தரத்துடன் வருகிறது. ரூ.20 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

08. டாடா ஹெக்ஸா

08. டாடா ஹெக்ஸா

டாடா ஹெக்ஸா எமது கருத்துக் கணிப்பில் 79 வாக்குகளை பெற்று 8வது இடத்தை பிடித்திருக்கிறது. மொத்த வாக்குகளில் 6 சதவீதத்தை இந்த கார் பெற்றிருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

வழக்கமாக டாடா கார்களில் இடவசதி சிறப்பாக இருக்கும். அதனை இந்த காரிலும் எதிர்பார்க்கலாம். கவர்ச்சிகர ஆக்சஸெரீகளுடன் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கலாம். ஆரியா காரின் அடிப்படை டிசைன் தெரிவது இதன் மைனஸாக இருக்கும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, ஹோண்டா பிஆர்வி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

07. ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்

07. ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்

எமது கருத்துக் கணிப்பில் 7வது இடத்தை ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் டீசல் மாடல் பெற்றிருக்கிறது. 79 வாக்குகளை பெற்றிருப்பதுடன், மொத்த வாக்குகளில் 6 சதவீததுடன் டாடா ஹெக்ஸாவுடன் சரிசமமான ஆதரவை பதிவு செய்திருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அமியோ காரின் டீசல் மாடலும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. 108 பிஎச்பி பவரையும், 230என்எம் டார்க்கையும் வழங்க வல்ல சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருவதுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

06. டாடா கைட் 5 செடான்

06. டாடா கைட் 5 செடான்

எமது கருத்துக் கணிப்பில் டாடா கைட் 5 செடான் கார் 89 வாக்குகளை பெற்று 6வது இடத்தை பிடித்திருக்கிறது. மிக குறைவான விலையில் வரும் சிறப்பான செடான் காராக பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர் மத்தியில் ஆவல் இருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

இன்டிகோ, ஸெஸ்ட் ஆகிய இரண்டு காம்பேக்ட் செடான் கார்களை விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ், பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் டாடா டியாகோ காரின் அடிப்படையிலான மற்றுமொரு புதிய காம்பேக்ட் செடான் காராக இதனை களமிறக்க உள்ளது. தற்போது கைட் 5 என்று குறிப்பிடப்படும் இந்த காரின் ஸ்டைல் சற்று வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.ரூ.4.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ காரின் எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த கார் வருகிறது.

05. மாருதி பலேனோ ஆர்எஸ்

05. மாருதி பலேனோ ஆர்எஸ்

தற்போது விற்பனையில் அசத்தி வரும் மாருதி பலேனோ காரின் அதிசக்திவாய்ந்த மாடலாக மாருதி பலேனோ ஆர்எஸ் கார் வருகிறது. எமது கருத்துக் கணிப்பில் 122 வாக்குகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

மாருதி பலேனோ காரில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் 110 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். கூடுதல் ஆக்சஸெரீகளுடன் சாதாரண மாடலிலிருந்து சற்று வித்தியாசப்படும். ரூ.7.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபரில் இந்த காரை சந்தைக்கு கொண்டு வருவதற்கு மாருதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

04. டாடா நெக்ஸான் எஸ்யூவி

04. டாடா நெக்ஸான் எஸ்யூவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி 4வது இடத்தை பிடித்திருக்கிறது. இதன்மூலமாக, இந்த எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெறும் வாய்ப்பை இப்போது கணிக்க முடிகிறது. எமது கருத்துக் கணிப்பில் 141 வாக்குகளை பெற்றிருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப்படும் இதன் டிசைன்தான் இதற்கு முத்தாய்ப்பான விஷயம். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன யுகத்துக்கு தக்கவாறாக அம்சங்களை பெற்றிருக்கும். ரூ.6.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் புத்தாண்டு ரிலீசாக இந்த மாடலை டாடா களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.

03. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - பெட்ரோல்

03. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - பெட்ரோல்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பெட்ரோல் மாடல் எமது கருத்துக் கணிப்பில் 3வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 178 வாக்குகளை இந்த கார் பெற்றிருக்கிறது. எனவே, இதற்கும் நல்ல எதிர்காலம் காத்திருப்பது புலனாகிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

டெல்லியில் 2,000சிசி திறனுக்கும் மேலான டீசல் எஞ்சின் வகையறாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், டீசலில் மட்டுமே வந்த புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பெட்ரோல் கூடிய விரைவில் சந்தைக்கு வருகிறது. புதிய இன்னோவா காரின் பெட்ரோல் மாடலில் 166 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.13 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே இந்த காரின் விலை விபரம் வெளியிடப்படக்கூடும் என்ற தகவலும் உள்ளது.

02. மாருதி இக்னிஸ்

02. மாருதி இக்னிஸ்

பட்ஜெட் கார்களிலேயே சற்று வித்தியாசமான ரசனையுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாருதி களமிறக்க இருக்கும் மாடல் இக்னிஸ். க்ராஸ்ஓவர் ரகத்தில் வர இருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எமது கருத்துக் கணிப்பில் 260 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

ஆப்பிள் ஸ்மார்ட்பிளே சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகள், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலும் எதிர்பார்க்கப்படுவதே ஆவலுக்கு அதிக காரணம். ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில், மஹிந்திரா கேயூவி100 மார்க்கெட்டை உடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 01. ரெனோ க்விட் ஏஎம்டி

01. ரெனோ க்விட் ஏஎம்டி

முதல்முறையாக நம்பர்1 இடத்தில் மாருதி தயாரிப்பை விஞ்சி இடம்பிடித்திருக்கிறது ரெனோ க்விட். ஆம், ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் கொண்டதாக வரும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்தான் எமது கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. 335 வாக்குகளுடன் மொத்தத்தில் 24 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

00சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ரெனோ க்விட் கார் இதுவரை 1.50 லட்சம் முன்பதிவுகளை பெற்ற இந்த காரின் புதிய ஏஎம்டி மாடல், இந்த எண்ணிக்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். இந்த மாதமே விற்பனைக்கு வருவதால், நீங்கள் முன்பணத்துடன் தயாராகிவிடலாம். ரெனோ க்விட் ஏஎம்டி மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரை அளிக்கும். ரூ.3.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
10 Most Anticipated Upcoming Cars: Drivespark Tamil Exclusive list.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark