அதிக டிமான்ட் கொண்ட டாப் 10 யூஸ்டு கார்கள்

Written By:

புதிய கார் விற்பனை சந்தைக்கு இணையாக பழைய கார் சந்தையும் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் கையில் அதிகரித்து வரும் பணப்புழக்கம் காரணமாக, ஒரு சில ஆண்டுகளிலேயே பலர் புதிய கார்களுக்கு தாவி விடுவதால், நல்ல கண்டிஷனில் உள்ள பழைய கார்களை சரியான விலையில் வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அத்துடன், எளிதான கடன் வசதி, கார் தயாரிப்பு நிறுவனங்களே, பழைய கார் தொழிலில் ஈடுபட்டிருப்பதால், நம்பகத்தன்மையுடன் வாங்க முடிகிறது. இந்தநிலையில், பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதால், சில கார்களுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. அதில், சிறந்த 10 கார்களையும், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அந்த கார்களின் குறைந்தபட்ச விலையையும் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். இதன் மூலம் பழைய கார் வாங்க செல்லும்போது எந்த காரை வாங்கலாம் என்ற முடிவுக்கு சட்டென வர முடியும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

பழைய கார் வாங்க செல்வோர்க்கு ஒரு திட்டம் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காக, குறைந்தபட்ச விலையை கொடுத்துள்ளோம். கார் தயாரிப்பு ஆண்டு, ஓடிய தூரம், வசதிகள் மற்றும் கண்டிஷனை பொறுத்து விலையில் வேறுபாடு இருக்கும் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். யூஸ்டு மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை உள்ள மாடல்களை மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது. ஓடிய தூரம், வசதிகள், தயாரிப்பு ஆண்டு ஆகியவை கணிக்கில்கொள்ளப்படவில்லை. பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் கார்களை வாங்கும்போது மறுவிற்பனை, சர்வீஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் உங்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் என்பதற்காகவே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

புதிய கார் மார்க்கெட்டில் மட்டுமல்ல, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் மாருதி ஆல்ட்டோ காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவுடன், மிக குறைவான விலையில் கிடைப்பதுடன், மாருதியின் சர்வீஸ் சப்போர்ட்டும் இந்த காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இருக்கும் இந்த கார், ரூ.90,000 விலையிலிருந்து நல்ல கண்டிஷனில் உள்ள மாருதி ஆல்ட்டோ கார்கள் கிடைக்கின்றன.

02. ஹூண்டாய் ஐ10

02. ஹூண்டாய் ஐ10

யூஸ்டு மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஹூண்டாய் ஐ10. இடவசதி, தோற்றம், தரம் என அனைத்திலும் நம்பகமான ஹேட்ச்பேக் கார். அத்துடன், சரியான விலையில் கிடைப்பதால் பலரும் ஹூண்டாய் ஐ10 காருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். நல்ல கண்டிஷனில் உள்ள கார் ரூ.1.5 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

03. ஹோண்டா சிட்டி

03. ஹோண்டா சிட்டி

பழைய மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி காருக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. பழைய தலைமுறை மாடல்கள்கூட இன்று நல்ல விலைக்கு போகின்றன. நம்பகமான பெட்ரோல் எஞ்சின் மற்றும் தரமான பாகங்கள் என்பதோடு, சிறப்பான டிசைனும் இந்த காருக்கு அதிக டிமான்ட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ரூ.2.25 லட்சம் முதல் நல்ல கண்டிஷனில் உள்ள பயன்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி கார்கள் கிடைக்கின்றன.

 04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் காருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. டிசைன், மைலேஜ், இடவசதி, விலை என அனைத்திலும் தன்னிறைவான இந்த காருக்கு பழைய கார் மார்க்கெட்டிலும் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. மறுவிற்பனை மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது. ரூ.1.75 லட்சம் விலை முதல் சிறந்த கண்டிஷனில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடலை வாங்க முடியும். ஆனால், டீசல் மாடலுக்கு கிராக்கி ஜாஸ்தி என்பதையும் மறவாதீர்கள்.

05. ஹூண்டாய் சான்ட்ரோ

05. ஹூண்டாய் சான்ட்ரோ

இந்திய மார்க்கெட்டின் மிகவும் வெற்றிகரமான மாடல் சான்ட்ரோ. விற்பனை நிறுத்தப்பட்டாலும், இந்த காருக்கு பழைய கார் மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. டிசைன், இடவசதி, விலை என அனைத்திலும் சிறப்பான மாடல். உற்பத்தி நிறுத்தப்பட்டதால், சல்லுசான விலையில் கிடைக்கிறது. ரூ.80,000 விலையிலிருந்து இந்த கார் கிடைக்கிறது.

06. மாருதி வேகன் ஆர்

06. மாருதி வேகன் ஆர்

ஹூண்டாய் ஐ10 கார் போன்றே பழைய கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பிரபல கார் மாடல். இடவசதி, விலை, குறைந்த பராமரிப்பு என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டுக்ககு சிறந்த மாடல். ரூ.1.25 லட்சம் விலை முதல் யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

07. ஹூண்டாய் வெர்னா

07. ஹூண்டாய் வெர்னா

டிசைனிலும், இடவசதியிலும் சிறந்த ஹூண்டாய் வெர்னா காருக்கு யூஸ்டு மார்க்கெட்டிலும் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. யூஸ்டு மார்க்கெட்டில் முந்தைய தலைமுறை வெர்னா மாடல் ரூ.2 லட்சம் முதல் கிடைக்கிறது.

08. மாருதி டிசையர்

08. மாருதி டிசையர்

மாருதி டிசையர் காருக்கான வரவேற்பு மாதாமாதம் அறிந்தததுதான். குறைந்த பராமரிப்பு கொண்ட செடான் என்பதே இதன் பலம். பெட்ரோல் மாடல் ரூ.1.8 லட்சம் விலையிலிருந்து கிடைக்கிறது.

09. ஹூண்டாய் ஐ20

09. ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காருக்கும் யூஸ்டு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. இடவசதி, வசதிகள், தரம் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்த ஹேட்ச்பேக் மாடல். சிறந்த கண்டிஷனில் உள்ள ஐ20 கார்கள் ரூ.2 லட்சத்திலிருந்து கிடைக்கின்றன.

10. டொயோட்டா இன்னோவா

10. டொயோட்டா இன்னோவா

இடவசதி, தோற்றம், வசதிகள், நம்பகமான எஞ்சின் என்று எல்லா விதத்திலும் இந்தியாவின் விருப்பமான எம்பிவி கார் மாடல் டொயோட்டா இன்னோவா. மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருப்பதால், ஓரளவு கண்டிஷனில் உள்ள இன்னோவா கார்கள் ரூ.2.5 லட்சத்திலிருந்து கிடைக்கிறது.

 
English summary
Here is list of top 10 second hand cars in India.
Story first published: Tuesday, January 12, 2016, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark