சென்னையில் 2016 பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் சொகுசு காரின் உற்பத்தி துவங்கியது

By Ravichandran

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் சொகுசு காரின் உற்பத்தி சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் துவங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் உயர்வகை சொகுசு செடான் கார் மாடலான இந்த புதிய தலைமுறை 7 சீரிஸ் காரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

அறிமுகம்;

அறிமுகம்;

2016 பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் சொகுசு செடான், சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

சர்வதேச சந்தைகளில் காட்சிபடுத்தபட்ட இரு புதிய மாடல்களின் இந்திய அறிமுகம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது நடைபெற்றது.

சென்னையில் உற்பத்தி;

சென்னையில் உற்பத்தி;

ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ, தங்களின் கார்களை சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்கிறது.

தற்போது, 2016 பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் சொகுசு செடான், சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு வெளியிடபடுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, பிஎம்டபிள்யூ சென்னை உற்பத்தி ஆலையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஜோஷென் ஸ்டால்காம்ப் பங்கேற்றார்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2016 பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் செடான், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய இரு இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு 4.4 லிட்டர், வி8 இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த இஞ்ஜின் 450 எச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த மாடல் 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் டீசல் மாடலுக்கு 3.0 லிட்டர், டர்போசார்ஜ்டு இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின் அதிகபட்சமாக 265 பிஹெச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த மாடலும், மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் இரண்டு இஞ்ஜின் மாடல்களும், ஸ்டாண்டர்டாக 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

போட்டி;

போட்டி;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் தயாரிக்கும் ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு, சக நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தான் போட்டி எழுகிறது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8எல் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் ஆகிய மாடல்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் சொகுசு கார் சந்தைகளில், விற்பனைகளை அதிகரித்து கொண்டு, தங்களுக்கு என தனி இடம் பிடிக்க பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய 3 கார் நிறுவனங்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

விலை;

விலை;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு செடானின் ஆரம்ப விலை, 1.1 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இருந்து துவங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்... ஆடம்பரத்தின் புதிய அடையாளம்!

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் அடிமாட்டு விலைக்கு ஏலம்

பிஎம்டபிள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, February 27, 2016, 10:19 [IST]
English summary
2016 BMW 7 Series was rolled from the Assembly Lines of the BMW Production centre in Chennai. BMW India recently showcased many new products at the recently concluded 2016 Delhi Auto Expo. Dr. Jochen Stallkamp, Managing Director, BMW Plant Chennai was present during the BMW 7 Series roll out from BMW Chennai plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+