2016 ஸ்கோடா ரேபிட் செடான் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
2016 ஸ்கோடா ரேபிட் செடான், இந்த பண்டிகை காலங்களின் போது, வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.
2016 ஸ்கோடா ரேபிட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா ரேபிட் செடான்...
செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம், ரேபிட் செடானை இந்தியாவில் அறிமுகம் செய்தது முதல் இது வரை, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் செய்யவில்லை.

2016 ஸ்கோடா ரேபிட் செடான்;
பொலிவு கூட்டப்படுவதற்காக காத்து கொண்டு இருக்கும் 2016 ஸ்கோடா ரேபிட் செடான், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிவு கூட்டப்பட உள்ள 2016 ஸ்கோடா ரேபிட் செடான், தெளிவான மற்றும் கூர்மையான லைன்கள், மறு வடிவமைக்கப்பட்ட இன்டீரியர்கள், இஞ்ஜினில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டிருக்கலாம்.

அறிமுகம்;
2016 ஸ்கோடா ரேபிட் செடான், இந்தியாவில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் பொது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி கொண்டே வருகிறது.
இதனால், இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 2016 ஸ்கோடா ரேபிட் செடானின் அறிமுகம் குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் எதையும் ஸ்கோடா நிறுவனம் வெளியிடவில்லை.

டிசைன்;
இங்கிலாந்திற்கான ஸ்கோடா ரேபிட், ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் ஆகியவற்றின் டிசைன் மொழியை பின்பற்றுகிறது. புதிய ஸ்கோடா ரேபிட் செடானும், இதே முறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன் பொருத்த வரை, இந்தியாவிற்கான 2016 ஸ்கோடா ரேபிட் செடானும், இங்கிலாந்திற்கான ஸ்கோடா ரேபிட் மாடலின் அம்சங்களை பின்பற்றும் என தெரிகிறது.

எக்ஸ்டீரியர்;
2016 ஸ்கோடா ரேபிட் செடானில், அதுவும் எக்ஸ்டீரியர் அம்சங்களில் ஏராளமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இதன் முன் பகுதிக்கு, புதிய கிரில், கூர்மையான ஹெட்லேம்ப்கள், புதிய பம்பர் டிசைன் மற்றும் புதிய பானட் பொருத்தப்படலாம்.
2016 ஸ்கோடா ரேபிட் செடான், டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் லைட்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய அல்லாய் வீல் டிசைன் கொண்டிருக்கும்.

இன்டீரியர்;
2016 ஸ்கோடா ரேபிட் செடான் காரின் உட்புற பகுதிக்கும், டேஷ்போர்ட்டிற்கும் புதிய ஃபேப்ரிக் மற்றும் கலர் டோன்கள் வழங்கப்படும்.
மேலும், புதிய 2016 ஸ்கோடா ரேபிட் செடான், டச்-ஸ்கிரீன் இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மறு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட டேஷ்போர்ட் மற்றும் கண்ட்ரோல்கள் கொண்டிருக்கும்.

இஞ்ஜின்;
2016 ஸ்கோடா ரேபிட் செடான், 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய ௨ தேர்வுகளில் வெளியாகலாம்.

கியர்பாக்ஸ்;
2016 ஸ்கோடா ரேபிட் செடானின் பெட்ரோல் இஞ்ஜின் வேரியன்ட், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொண்டிருக்கலாம்.
இதன் டீசல் இஞ்ஜின் வேரியன்ட், 7-ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் பாக்ஸ் கொண்டிருக்கும்.

போட்டி;
2016 ஸ்கோடா ரேபிட் செடான், ஹோண்டா சிட்டி, ஃபோகஸ்வேகன் வென்ட்டோ மற்றும் புதிய மாருதி சுஸுகி சியாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடா வேண்டி இருக்கும்.

விலை;
புதிய 2016 ஸ்கோடா ரேபிட் செடான், சுமார் 8 லட்சம் ரூபாய் முதல் 12 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;
கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
ரேபிட் தொடர்புடைய செய்திகள்
ஸ்கோடா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








