2017 ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?
ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் 2017 வெர்னா காரின் அதிகாரப்பூர்வமான அறிமுகம், சீனாவில் 2016 ஷெங்டூ மோட்டார் ஷோவில் நடைபெற்றது. 2017 ஹூண்டாய் வெர்னா காரானது, அதன் டிசைன், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அம்சங்களினால் இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2017 ஹூண்டாய் வெர்னா தொடர்புடைய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் 2017 ஹூண்டாய் வெர்னா, ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் டிசைன் மொழியின் அடிப்படையில் வடிவமைக்கபட்டுள்ளது.
2017 ஹூண்டாய் வெர்னா, நிச்சயம் ஈர்க்கும் வகையிலான டிசைன் கொண்டுள்ளது என கூறலாம்.

இஞ்ஜின்;
2017 ஹூண்டாய் வெர்னா, 100 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.4 இஞ்ஜின் மற்றும் 123 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;
2017 ஹூண்டாய் வெர்னாவின் இஞ்ஜின்கள் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தேர்வு முறையிலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் கிடைக்கிறது.

எக்ஸ்டீரியர்;
2017 ஹூண்டாய் வெர்னா, பெரிய ஹெக்ஸகனல் கிரில், புரொஜெக்டர் லைட்டிங் வசதியுடைய ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் எனப்படும் டேடைம் ரன்னிங் லைட்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், மறுவடிவமைக்கபட்ட சி-பிள்ளர், ஆங்குளார் ஃபாக் லேம்ப்கள் மற்றும் ரியர் மவுண்டட் ஸ்பாய்லர் உடைய ஸ்போர்ட்டியான பம்பர் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;
சீன வாகன சந்தைகளை மையப்படுத்தி அறிமுகம் செய்யப்பட 2017 ஹூண்டாய் வெர்னா, சில்வர் ட்ரிம் உடைய பிளாக் இன்டீரியர் கொண்டுள்ளது. இதன் இன்டீரியரில், ஹெச்விஏசி வென்ட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் 8-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பரிமாணங்கள்;
2017 ஹூண்டாய் வெர்னா, 4,380 மில்லிமீட்டர் நீளமும், 1,728 அகலமும், 1,460 உயரமும் கொண்டுள்ளது.
மேலும், இது 2,600 மில்லிமீட்டர் வீல்பெஸ் உடையதாக உள்ளது.

அறிமுகம்;
2017 ஹூண்டாய் வெர்னா, இந்தியா உள்ளிட்ட பிற வாகன சந்தைகளில் பிரவேசம் செய்வதற்கு முன்பாக, முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.
2017 ஹூண்டாய் வெர்னா, டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களினால் இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருந்தாலும், ஹூண்டாய் நிறுவனம், இந்த மாடலை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யும் என்பதை தெரிந்து கொள்ள இன்னும் காத்திருக்க வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
2017 ஹூண்டாய் வெர்னா கான்செப்ட், பெய்ஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகம்
புதிய ஹூண்டாய் 4எஸ் ப்ளூயிடிக் வெர்னா கார் விற்பனைக்கு வந்தது -விபரம்
புதுப்பொலிவுடன் வரும் புதிய ஹூண்டாய் வெர்னாவுக்கு முன்பதிவு துவங்கியது


Click it and Unblock the Notifications








