2017 மாருதி ஸ்விஃப்ட் காரில் எதிர்பார்க்கப்படும் 6 முக்கிய விஷயங்கள்!

Written By:

ிஇந்திய மார்க்கெட்டின் சூப்பர்ஸ்டார் மாடல் மாருதி ஸ்விஃப்ட். வயது ஏறினாலும் இதன் ஸ்டைலும், இளமையும் குன்றவில்லை. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், தோற்றத்தில் மெருகூட்டப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சுஸுகி நிறுவனம் இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை தனது தாயகமான ஜப்பானில் நாளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இந்தியர்களின் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும், இந்த காரில் எதிர்பார்க்கப்படும் சில ஹைலைட்டான விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் இலகு எடையிலான புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. நீள, அகல, உயரத்தில் மாறுதல்கள் இருக்காது என்றாலும், இரண்டு ஆக்சில்களுக்கு இடையிலான வீல் பேஸ் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதால், உட்புறத்தில் அதிக இடவசதி கிடைத்திருக்கும் என நம்பலாம். குறிப்பாக, ஸ்விஃப்ட் காரின் பின் இருக்கை பயணிகளுக்கு சற்று கூடுதல் இடவசதி கொண்டதாக இருக்கும். பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியும் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தோற்றம்

புதிய தோற்றம்

மாருதி ஸ்விஃப்ட் காரின் வெற்றிக்கு அதன் துள்ளலான தோற்றம் ஒரு முக்கிய காரணம். அந்த துள்ளல் குறையாமல் மிக நேர்த்தியாக புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருப்பது இதுவரை கிடைத்த படங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது. புதிய க்ரில், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பம்பர் அமைப்பு ஆகியவையும், புதிய அலாய் வீல்கள், புதிய டெயில் லைட்டுகளும் பழைய மாடலிலிருந்து புதிய தலைமுறை மாடலாக வித்தியாசப்படுத்தும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் தொடுதிரை பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும். மேலும், இந்திய நிகழ்நேர வரைபட சேவையை வழங்கும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் நேவிகேஷன் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

முதல்முறையாக மாருதி ஸ்விஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்திய மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

அனைத்து கார்களிலுமே ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்க மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் ஹைபிரிட் சிஸ்டம் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும். இந்த மாடல்கள் அதிக மைலேஜை வழங்குவதோடு, குறைவான புகையுடன் சுற்றுச்சூழலுக்கும் சிறப்பானதாக இருக்கும்.

ஆர்எஸ் மாடல்

ஆர்எஸ் மாடல்

பலேனோ காரில் வருவது போன்றே ரேஸிங் ஸ்போர்ட்[RS] என்று குறிப்பிடப்படும் சக்திவாய்ந்த மாடலிலும் புதிய ஸ்விஃப்ட் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆர்எஸ் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
2017 Maruti Swift: 6 Things To Know.
Story first published: Monday, December 26, 2016, 9:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark